Skip to main content

Posts

தமிழக அரசு பேருந்துகளின் கட்டணம் 60 % உயர்வு

2014 ஆகஸ்ட் மாதத்திற்கு பின் இப்போது பெட்ரோல் விலை உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75.12. டீசல் 66.84. 2017 ஜூன் மாதம் பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தபின் பெட்ரோல் விலை 8 சதவீதமும், டீசல் விலை 12 சதவீதமும் உயர்ந்திருக்கிறது என்றால் மத்திய, மாநில அரசுகள் எந்த அளவுக்கு பெட்ரோலிய பொருட்கள் மீது வரியை சுமத்தி உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும். இதற்கும் 2014ல் பெட்ரோல் மற்றும் டீசலை பிரித்து எடுக்கும் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 109 டாலராக இருந்தது. அப்போதும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.75க்குள் இருந்தது. இப்போது அதே கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 70 டாலருக்குள் தான் உள்ளது.  எப்படிப்பார்த்தாலும் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.50 முதல் 55க்குள் தான் இருக்க வேண்டும். ஆனால் விலை இந்த அளவுக்கு உயர காரணம் வரிகள். இது லாபத்திற்காகவும், அரசு வருமானத்திற்காகவும் மக்கள் மீது சுமத்தப்பட்ட சுமை. இந்த விலையில் லிட்டருக்கு ரூ.19 மத்திய அரசு வரியாக வசூலிக்கிறது. அதே போல் தமிழகத்தை பொறுத்தவரையில் ஒரு லிட்டர் விலையில்...

மாநில மொழிகளின் சவால்!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவும் தாய்மொழிக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பள்ளிக்கூடங்களில் முதல் மரியாதை தாய்மொழிக்கும், அதற்குப் பிறகுதான் ஆங்கிலத்துக்கும் தரப்பட வேண்டும் என்றும், அதன் மூலம் மட்டுமே இந்தியாவின் கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நாம் பாதுகாக்க முடியும் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறியிருப்பதை 'இந்துத்துவ' வாதக் கண்ணோட்டம் என்று புறம்தள்ளிவிடலாகாது.  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த செப்டம்பர் மாதம் தில்லியில் நடந்த 'இந்தி தினம்' கொண்டாட்டத்தில் ஆற்றிய உரை அவரது சொந்த மாநிலமான உத்தரப் பிரதேசத்திலேயே சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பியது. இந்தி பேசும் மாநில மக்கள் ஏனைய மாநில மொழி பேசுபவர்களுக்குக் கூடுதல் மரியாதையும், போதிய இடமும் தருவதன் மூலம்தான் அவர்களது அன்பையும் ஆதரவையும் பெறமுடியும் என்று கருத்துத் தெரிவித்திருந்தார் குடியரசுத் தலைவர்.  'இந்தியை தேசிய மொழியாக அறிவித்திருந்தாலும்கூட அதற்கு இந்தியாவின் சில பகுதிகளில் க...

Tamil Nadu - India's Economic powerhouse

We have everything in our mother Tongue. watching cricket in Tamil Top hit Hindi movies in Tamil BBC in Tamil Discovery ,Nat Geo channels in Tamil Science research In Tamil Own Media Own Film Industry Own political Parties Own education infrastructure Own Metros to work. Own Wikipedia Own medical system (siddha) Google in Tamil FB in Tamil Ubuntu in Tamil Microsoft In Tamil Android In Tamil iOS In Tamil literature in Tamil Twitter in Tamil Snapdeal in Tamil Prime minister speaks in Tamil Godaddy in Tamil Youtube in Tamil Twitter in Tamil Own culture Tamil nadu is a hub to automobile State with most number of Business Enterprises Highest number of Chess Grandmasters Highest number of presidents. 22nd must visit place in the world by NYT. Best medical facility (even 100000+ of foreigner come here for Treatment) Lets see another We have contributed our Nation as 3 Nobel Prizes out of 8 2 Oscar Awards out of 6 So Many 

உடுமலை ஆணவக் கொலை வழக்கில் 6 பேருக்கு தூக்கு தண்டனை: ஒருவருக்கு ஆயுள்; மூவரை விடுவித்து நீதிமன்றம் உத்தர

உடுமலை சங்கர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து திருப்பூர் சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அதிரடி உத்தரவிட்டது. மேலும், ஒருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை, ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தும், மூவரை விடுவித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உடுமலை அருகிலுள்ள மடத்துக்குளம் தாலுகாவுக்கு உள்பட்ட குமரலிங்கம், சாவடி வீதியைச் சேர்ந்தவர் வேலுசாமியின் மகன் சங்கர் (22). திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்தவர் கௌசல்யா (20). பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த நிலையில், இரு வேறு ஜாதிகளைச் சார்ந்த இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கௌசல்யா வீட்டில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், 2016 மார்ச் 13-ஆம் தேதி உடுமலை பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்த இத் தம்பதியை, வாகனங்களில் வந்த ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியது. படுகாயமடைந்த இருவரும் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் சங்கர் உயிரிழந்தார். சிகிச்சைக்குப் பிறகு கௌசல்யா வீடு திரும்பினார். இக்கொலை தொடர்பாக உடும...

உத்தரப்பிரதேசம் இந்தியாவின் பாதுகாப்பற்ற மாநிலம்

உத்தரப் பிரதேசத்தில் 16 மேயர் பதவிகளில், 14 இடங்களைக் கைப்பற்றிய மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் இருக்கிறது பி.ஜேபி. இதை விடுங்கள்... தேசியக் குற்றப்பிரிவு ஆணையம் 2016-ம் ஆண்டு நடைபெற்ற குற்றங்கள் தொடர்பான புள்ளிவிவரங்களை வெளியிட்டது. இதில், உத்தரப்பிரதேசம்தான் தேசத்தில் நடக்கும் 14 சதவிகிதக் குற்றங்களுக்குக் காரணமாகவுள்ளது என்ற தகவல் அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது. இந்தியாவில் 2016-ம் ஆண்டில் மட்டும் 2.6 சதவிகித குற்றங்கள் அதிகரித்துள்ளன. அந்த ஆண்டு 48,31,515 குற்றங்கள் நாடு முழுவதும் நடந்துள்ளன. இது, 2015-ம் ஆண்டைவிட 21,000 அதிகம். குற்றங்களில், கடத்தல் குற்றங்கள்தான் முதலிடத்தில் உள்ளன. 2015-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது கடத்தல் குற்றங்கள் 6 சதவிகிதம் அதிகரித்துள்ளன. கொள்ளைக் குற்றங்கள் 11.85 சதவிகிதம் குறைந்துள்ளன. இந்தியாவில் 2016-ம் ஆண்டு மட்டும் 30,450 பேர் கொலை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்தியாவில் அதிக சொத்துக் குவிப்பு குற்றங்கள் நடைபெறும் நகரமாக டெல்லி உள்ளது. ஆள் கடத்தல் குற்றங்களில் மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது. சிறப்பு வழக்குகள் சென்னையில் அதிகம் ப...

Lashkar-e-Taiba தலைவர் Hafiz Muhammad Saeed வீட்டுக் காவலில் இருந்து விடுவித்து பாகிஸ்தான் நீதிமன்றம்

மும்பையில் 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டச் சம்பவத்துக் கு மூளையாகச் செயல்பட்ட லஷ்கர்-ஏ-தொய்பா தலைவர் ஹஃபீஸ் சயீதை வீட்டுக் காவலில் இருந்து விடுவித்து பாகிஸ்தான் நீதிமன்றம், உத்தரவிட்டிருப்பது எந்தவித அதிர்ச்சியையோ, வியப்பையோ ஏற்படுத்தவில்லை. ஆரம்பம் முதலே அவரது கைதும், அவரை வீட்டுக் காவலில் வைத்திருந்ததும் வெறும் கண்துடைப்புதான் என்பது உலகத்துக்கே தெரியும். ஹஃபீஸ் சயீது மீது எந்தவொரு பயங்கரவாதக் குற்றச்சாட்டின் அடிப்படையிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. பொது ஒழுங்குக்குப் பங்கம் விளைவிக்க முயன்றார் என்கிற வலுவில்லாத குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் அவர் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். அவர்மீது குறிப்பிட்ட எந்தவிதக் குற்றச்சாட்டும் அரசால் முன்வைக்க முடியாததைக் காரணம் காட்டி, இப்போது பாகிஸ்தான் நீதிமன்ற நீதிபதிகள் அவரது நான்காண்டு வீட்டுக் காவலை விலக்கி இருக்கின்றனர். 1990-இல் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பை உருவாக்கியதைத் தொடர்ந்து, பல்வேறு பயங்கரவாதச் செயல்களுக்கான திட்டங்களைத் தீட்டி நிறைவேற்றுவதிலேயே சயீத...

ஜிம்பாப்வேயில் ஆட்சி மாற்றம்!

ஜிம்பாப்வேயில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றம் அதிர்ச்சியை ஏற்படுத்தாவிட்டாலும் எதிர்பாராதது என்றுதான் கூற வேண்டும். கடந்த 37 ஆண்டு காலமாக ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயின் அசைக்க முடியாத தலைவர் என்று கருதப்பட்ட 93 வயது அதிபர் ராபர்ட் முகாபே பதவி விலகி ஆட்சி மாற்றத்திற்கு வழிகோலியிருக்கிறார். இது அவர் விரும்பி ஏற்றுக்கொண்ட பதவி விலகல் அல்ல. சூழ்நிலையின் கட்டாயத்தால் பதவி விலக வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஏழு ஆண்டுகளில் ஆப்பிரிக்காவின் பல்வேறு நாடுகளில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றன. நீண்ட நாள் அதிபர்கள் பலரும், அசைக்க முடியாத சக்தி என்று கருதப்பட்டவர்களும் தூக்கியெறியப்பட்டிருக்கின்றனர் அல்லது பதவி விலகி இருக்கிறார்கள். நைஜர் அதிபர் மம்மாடெள தஞ்சா, டுனீசியாவின் சைன் எல் அபிபைன் பென் அலி, எகிப்தின் ஹோஸ்னி முபாரக், ஐவரி கோஸ்டின் லாரண்ட் பேக்போ, லிபியாவின் மும்மார் கடாஃபி, மாலத்தீவின் அம்மாடோ டெளமானி தோரே, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் ஜெனரல் பிரான்கோயிஸ் போஸிúஸ, எகிப்தின் முகம்மது மோர்ஸி, பர்கினா பாய்úஸாவின் பிளேஸ் காம்ப்போ...