Sunday, 22 June 2014

ஒன்றுபட்ட இந்தியா.......

                                        




ஒன்றுபட்ட இந்தியாவை
1946-47-ல் பிரித்த போது...
கேட்பாரற்றுக் கிடக்கும் பிணங்களை
கழுகுகள் கொத்தித் தின்னும்
கோரக் காட்சி!



வாழை இலையின் பயன்கள்

                        


1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.
2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.
3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.
4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி
காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும்
விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை
சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.
5. காயம், தோல் புண்களுக்கு
தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு
மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.
6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.
7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.
தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான் . அது
சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம்
இருக்கும். இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு
இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில்
தான் இங்கு இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது. இது காலமாற்றத்தினால்
ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.
ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும்
போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற
முயற்ச்சிக்கலாம். இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது
ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கு தெரியவரும்.
நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் குத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி
வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே.
வாழைமரத்தில் குருத்தை கொஞ்சம் கிளரி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து
அதில் ஊறும் நீரை பருகினால் பேதி, வயிற்று வலி போன்றவை நீங்கும்

Tuesday, 3 June 2014

“அடக் கடவுளே..! இதிலுமா..?”

                                     




“அடக் கடவுளே..! இதிலுமா..?”
----------------------------------------------
ஆண்களின் பெயர் சூட்டப்பட்ட
புயல்களை விட
பெண்களின் பெயர் கொண்ட புயல்களால்
அதிக பாதிப்பு ஏற்படுவதாக
உலகளாவிய அளவில்
மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

தெரிந்துகொள்வோம்

                                                 தெரிந்துகொள்வோம் :

                            

அந்த காலங்களில் நமது வீடுகளில் தண்ணிர் செம்பு குடங்களில் பிடித்து வைப்பார்கள் ஏன் தெரியுமா..?
கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பணத்தைத் தண்ணீராக செலவு செய்யும் காலமிது. ஆனால், ''வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாசம் நூற்றுகனகான ரூபாய் மிச்சமாகும்...
''மைசூர்ல இருக்கற அஜய் நினைவு குடிநீர் நிறுவனத்தைச் சேர்ந்தவங்க, செம்புப் பாத்திரத்துல தண்ணியை வெச்சி ஒரு ஆராய்ச்சி நடத்தினாங்க. அதோட முடிவுல, 'செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை'னு அந்த நிறுவனம் சொல்லியிருக்கு....
இந்தத் தகவல் தெரிஞ்சதிலிருந்து செம்புக் குடத்துல வெச்சிருந்துதான் தண்ணியைக் குடிக்கின்றார்கள். கிணத்துல கிடைக்கின்றத் தண்ணி, செம்புக் குடத்துக்குப் போனதும் மினரல் வாட்டர் மாதிரி அருமையாக மாறிவிடுகிறதாம்...
செம்பு குடம் இல்லனாலும் பரவாயில்லை. ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள்ள போட்டு வெச்சா கூட உங்க வீட்டுத் தண்ணி தரமானதா மாறிடும். மூணு நாளைக்கு ஒரு தரம் செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தா பாசி புடிச்ச மாதிரி இருக்கும். அதெல்லாம் பாக்டீரியாக்கள்தான்...
தகட்டைச் சுத்தமா கழுவிவிட்டு திரும்பவும் குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம். அந்தக் காலத்துல பல வீடுகள்ல செம்புக்குடம்தான். இன்னிக்கும் சில கிராமங்கள்ல செம்பு குடத்துலதான் தண்ணி குடிக்கறாங்க...
என்னதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும் நம் முன்னோர்கள், முன்னோர்கள் தான்...!

ஜவுளி ஏற்றுமதியில் இந்தியா இரண்டாம் இடத்திற்கு முன்னேற்றம்

   

                                            ஜவுளி ஏற்றுமதியில் இந்தியா இரண்டாம் இடத்திற்கு முன்னேற்றம்


புதுடெல்லி:உலகளாவிய ஏற்றுமதி வர்த்தகத்தில் 55 சதவிகிதம் ஜவுளித் துறையைச் சார்ந்ததாகும். இத்துறையில் சீனா, இத்தாலி, ஜெர்மனி போன்ற பெரிய நாடுகளுடன் வங்காளதேசம், வியட்நாம் போன்ற சிறிய நாடுகளும் முன்னணியில் இருக்க இந்தியா கடந்த வருடம் ஆறாவது இடத்தையே பெற்றிருந்தது. 

மலிவு விலை, கடுமையான உழைப்பு மற்றும் அமெரிக்காவின் குறைந்த வரி விதிப்பு நடைமுறைகள் போன்றவைகள் இந்த நாடுகளை ஐரோப்பாவின் வர்த்தக சங்கிலியில் முக்கிய சப்ளையர்களாக இருக்க உதவியது. கடந்த ஆண்டு வங்காளதேசத்தில் ஆடை தயாரிப்பு தொழிற்சாலைகளில் ஏற்பட்ட விபத்துகள் அவர்களது வர்த்தகத்தை சிறிதளவு பாதித்தது. 

இது மட்டுமின்றி இந்தியாவின் ஆயத்த ஆடை ஜவுளி ஏற்றுமதியின் வர்த்தகமும் 23 சதவிகிதம் வரை விரிவடைந்தது. இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியங்களின் வர்த்தக மேம்பாடு மற்றும் வெளிநாட்டு சந்தைகளின் மீதான கவனத்தை இந்தியா மாற்றி கொண்டது தான் முக்கிய காரணம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். 

இதன் விளைவாக இந்த ஆண்டு ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் வெளியிட்டுள்ள கணக்கெடுப்பின்படி ஜெர்மனி, இத்தாலியை பின்னுக்கு தள்ளிய இந்தியா ஜவுளி ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. 

இந்த வர்த்தகமானது ஜவுளி இழை, நூல் முதற்கொண்டு பருத்தி, பட்டு, கம்பளி மற்றும் செயற்கை நூல் போன்றவைகளால் செய்யப்பட்ட ஆயத்த ஆடைகள் உட்பட அனைத்தும் அடங்கும். இருப்பினும், முதலிடம் பெற்றுள்ள சீனாவின் கடந்த ஆண்டு வர்த்தகம் 274 பில்லியன் டாலர் என்றிருக்க இந்தியாவின் வர்த்தகம் 40 பில்லியன் டாலர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

நாம் சீனாவை நெருங்க வேண்டுமானால் இந்திய அரசு ஜவுளித் துறைக்கு மிகப் பெரிய ஒத்துழைப்பை அளிக்கவேண்டும் என்பதையே இந்த அளவீடு வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

Thursday, 1 May 2014

சென்டிரல் ரெயில் நிலையத்தில் 2 குண்டுகள் வெடித்தது: பெண் பலி

                                      சென்டிரல் ரெயில் நிலையத்தில் 2 குண்டுகள் வெடித்தது: பெண் பலி


சென்னை, மே. 1

சென்னை நகருக்கு தீவிர வாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத் துறையினர் கடந்த சில ஆண்டுகளாக எச்சரித்து வந்தனர். இதையடுத்து தமிழக போலீசாரின் நடவடிக்கைகளால் தீவிரவாதிகள் கைவரிசை காட்ட முடியாமல் இருந்தது. இந்த நிலையில் பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர் – இ– தொய்பா தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் தற்கொலை படையினரை இலங்கை வழியாக தமிழ்நாட்டுக்குள் ஊடுருவ வைக்க திட்டமிட்டு முயற்சிகளில் ஈடுபட்டனர். 

இதை கண்டுபிடித்த உளவுத்துறை தமிழக போலீசாரை உஷார்படுத்தினார்கள். அதன்பேரில் நடந்த சோதனையில் நேற்று முன் தினம் இரவு திருவல்லிக் கேணியில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவாளி முகம்மது ஜாகீர்உசேன் என்பவன் பிடிபட்டான். அவன் சென்னையில் பல இடங்களில் தொடர் குண்டு வெடிப்புக்கு சதி திட்டம் தீட்டியது தெரிய வந்தது. இதனால் சென்னையில் நேற்று முதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. 

தீவிரவாதிகள் சென்னையில் ஊடுருவ தொடங்கி இருக்கும் தகவலால் ஏற்பட்ட அந்த அதிர்ச்சி நீங்கு வதற்குள் இன்று (வியாழக்கிழமை) காலை சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் குண்டுகள் வெடித்தன. கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இந்த குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் பெங்களூரில் புறப்பட்டு சென்னை வழியாக வட கிழக்கு மாநிலமான அசாம் மாநில தலைநகர் கவுகாத்திக்கு செல்லும் ரெயிலாகும். 

பெங்களூரில் இரவு 11.30 மணிக்கு புறப்படும் அந்த ரெயில் சென்னைக்கு அதிகாலை 5.40 மணிக்கு வந்து சேரும். சென்னையில் சுமார் 40 நிமிடங்கள் நிற்கும் இந்த ரெயில் பயணிகளை இறக்கி – ஏற்றி விட்டு காலை 6.20 மணிக்கு புறப்படும். சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் இந்த ரெயிலில் சென்னையில் இருந்து தினமும் ஆயிரக் கணக்கானவர் செல்வதுண்டு. இன்று கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் சுமார் 1½ மணி நேரம் தாமதமாக காலை 7.05 மணிக்குத்தான் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தின் 9–வது பிளாட்பாரத்துக்கு வந்து சேர்ந்தது. இதனால் ரெயிலை சீக்கிரம் எடுத்து விடுவார்கள் என்ற நிலையில் நூற்றுக்கணக்கான பயணிகள் அவசரம், அவசரமாக ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தனர். 

அடுத்த 10–வது நிமிடம் அதாவது 7.15 மணியளவில் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலின் முன்பதிவு பெட்டியான எஸ்–4 பெட்டியில் பயங்கர சத்தத்துடன் ஒரு குண்டு வெடித்தது. அடுத்த வினாடியே அருகில் உள்ள எஸ்–5 முன்பதிவு பெட்டியிலும் பயங்கர சத்தத்துடன் மற்றொரு குண்டு வெடித்தது. அடுத்தடுத்து வெடித்த இரு குண்டுகளும் பயணிகள் அமரும் இருக்கைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்ததாகும். இதனால் எஸ்–4, எஸ்–5 இரு பெட்டிகளிலும் ஒரு பகுதி நொறுங்கியது. இருக்கைகள், கண்ணாடிகள் சிதறின. இதில் சிக்கிக் கொண்ட பயணிகள் அலறினார்கள். 

உயிர் பிழைக்க சிதறி ஓடினார்கள். இதையடுத்து அருகில் இருந்த மற்ற பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். குண்டுகள் வெடிக்கின்றன என்ற தகவல் பரவியதும் உடமைகளை கூட எடுக்காமல் பயணிகள் அலறி யடித்தப்படி ரெயிலில் இருந்து இறங்கினார்கள். இதனால் 9–வது பிளாட்பாரத்தில் பரபரப்பும் பீதியும் ஏற்பட்டது. இதற்கிடையே குண்டுகள் வெடித்த தகவல் அறிந்ததும் சென்ட்ரல் ரெயில்வே போலீசார் 9–வது பிளாட் பாரத்துக்கு விரைந்தனர். குண்டுகள் வெடித்த இரண்டு பெட்டிகளிலும் ஏறி பார்த்தபோது சுமார் 14 பேர் காயங்களுடன் கிடப்பது தெரிந்தது. 

அவர்களை மீட்டு ரெயில் பெட்டிகளில் இருந்து கீழே இறக்கினார்கள். அப்போது எஸ்–4 பெட்டிக்குள் ஒரு இளம்பெண் குண்டு வெடிப்பில் சிக்கி பலியாகி இருப்பது தெரிந்தது. போலீசார் அவர் உடலை அகற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான அந்த பெண்ணின் சுவாதி என்றும் 22 வயதானவர் என்றும் ஆந்திரா மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. 

காயம் அடைந்த 14 பயணிகள் அருகில் உள்ள அரசு ராஜீவ்காந்தி பெரிய ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயம் அடைந்த பயணிகளில் 3 பேருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. 

இதற்கிடையே சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசாரும், தமிழக போலீசாரும் சுமார் 500 பேர் குவிக்கப்பட்டனர். அவர்கள் முதல் கட்டமாக கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலின் அனைத்து பெட்டிகளிலும் ஏறி சோதனை நடத்தினார்கள். தீவிரவாதிகள் வேறு ஏதாவது குண்டுகள் வைத்துள்ளார்களா? என்று அதிரடி சோதனை நடத்தினார்கள். 

சென்ட்ரலில் இருந்து மற்ற நகரங்களுக்கு புறப்பட்டு செல்லும் ரெயில் சேவைகளும் உடனடியாக நிறுத்தப்பட்டன. அந்த ரெயில்களின் பெட்டிகளிலும் போலீசார் சோதனையிட்டனர். அதில் வேறு எங்கும் குண்டுகள் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதுபோல சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் நோக்கி வந்த மற்ற ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அவற்றிலும் குண்டுகள் எதுவும் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டது. அதன் பிறகு 9.30 மணிக்குப் பிறகு ரெயில் சேவை தொடங்க ஆரம்பித்தது. குண்டு வெடித்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் எஸ்–4, எஸ்–5 பெட்டிகளை மட்டும் விட்டு, விட்டு 10.45 மணிக்கு புறப்பட்டு சென்றது. கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் குண்டு வைத்தது யார்? என்று தெரியவில்லை. 

எந்த தீவிரவாத இயக்கமும் இதற்கு பொறுப்பு ஏற்க வில்லை. சென்னையில் நேற்று முன்தினம் பிடிபட்ட பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேனின் கூட்டாளிகள் இந்த குண்டு வெடிப்புகளை நடத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குற்றவாளிகளை கண்டுபிடிக்க பல தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன

Sunday, 27 April 2014

                                             விண்கல் மோதி பூமியின் ஆயுட்காலம் முடிவடையும் நிலைக்கு வந்துவிடும்


ஜோகன்னஸ்பர்க்:பூமியில் மோத வரும் மிகப்பெரும் விண்கலத்தால், மிகப்பெரிய தாக்கம் பூமியில் எற்படும் என்று புதிய ஆய்வு ஒன்றில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.      

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இணையதளம் ஒன்று, பி 612 அறக்கட்டளை ஒன்று செயத ஆய்வை வெளியிட்டுள்ளது. 

இதில் ஒவ்வொரு 100 ஆண்டுகளுக்கு முறையும் மிகபெரிய விண்கல் ஒன்று பூமியை தாக்க வருகிறது என்றும், இந்த முறை பூமியை தாக்கும் விண்கல் ஹிரோஷிமா அணுகுண்டுகளை விட ஆபத்தான விளைவுகளை கொண்டு வரும் என்று நிருபிக்க்கப்பட்டுள்ளதாகவும் இந்த ஒரு விண்கல் 40 ஹிரோஷிமா அணுகுண்டுகளுக்கு சம்மானது என்றும் தெரிவித்துள்ளது.

மணிப்பூர்: 4,000 ஆயுதங்கள், 100+ பதுங்கு குழிகள், பற்றியெரியும் பகை; வடகிழக்கில் என்ன நடக்கிறது?

  பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 4ம் தேதி இரண்டு பெண்களை முழுவதும் ஆடை களைந்து தெருவில் அழைத்துச் சென்றனர், மானபங்கம் ச...