சென்னை: இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே ராமேசுவரம் தீவு வழியாக பல நூற்றாண்டு காலமாக வர்த்தக தொடர்பு இருந்து வந்தது. தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் தேயிலை தோட்ட வேலைக்காக இலங்கைக்கு சென்று வந்தனர். தமிழ் நாட்டில் இருந்து சிலவகை பொருட்களை கொண்டு சென்று கொழும்பு நகரில் விற்பனை செய்த தமிழக வணிகர்கள் அங்கிருந்து தேயிலை போன்ற பொருட்களை இங்கு கொண்டு வந்து வியாபாரம் செய்து வந்தனர். அவர்கள் மண்டபத்தில் இருந்து படகுகள் மூலம் பாம்பன் வழியாக தனுஷ்கோடி துறைமுகம் சென்று அங்கிருந்து கப்பலில் இலங்கையின் தலைமன்னார் பகுதிக்கு சென்று வந்தனர். பயணிகள் வசதிக்காக மண்டபத்துக்கும், தனுஷ்கோடி துறைமுகத்துக்கும் இடையே (பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம் வழியாக) 1876-ம் ஆண்டு பாம்பன் கடல் மீது ரெயில் பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக 1914-ல் பயணிகள் ரெயில் போக்குவரத்து தொடங்கியது. இந்த ர...