Skip to main content

Posts

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ முடியுமா? மயில்சாமி அண்ணாதுரை பேச்சு

கிணத்துக்கடவு: கோவை அருகே செட்டிக்காபாளையத்தில் அர்ஜூன் பொறியியல் கல்லூரி திறப்பு விழா நேற்று நடந்தது.  கல்லூரி தலைவர் சூர்யநாராயணன் தலைமை தாங்கினார். முதல்வர் விஜயராகவன் முன்னிலை வகித்தார். செயலாளர் சுரேஷ்குமார் வரவேற்றார். சந்திராயன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை துவக்கி வைத்தார். அவர் பேசியதாவது: சந்திராயன் விண்கலம் ஒன்றை செலுத்துவதற்கு முன் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகள் 69 விண்கலங்களை விண்ணில் செலுத்தின. சந்திரனில் தண்ணீர் இருக்கிறதா? என்று ஆராய்ந்து வந்தன. அவர்களால்  சந்திரனில் தண்ணீர் இருப்பதை கண்டறிய முடியவில்லை. இந்நிலையில் உலக அளவில் 70வதாக சந்திராயன்&1 விண்கலத்தை சந்திரனில் ஆராய்ச்சி செய்ய இந்தியா அனுப்பியது. அங்கு தண்ணீர் இருப்பதை சந்திராயன் &1  விண்கலம் கண்டறிந்து இந்தியாவுக்கு தகவல்களை அளித்தது. இதனால் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மீது மற்ற நாடுகளின் பார்வை திரும்பியுள்ளது. 43 ஆண்டுகளாக தொடர்ந்து சந்திரனுக்கு விண்கலத்தை ஆய்வுக்காக செலுத்தி வந்த அமெரிக்கா, சந்திராயன் கண்டறிந்ததை மீண்டும் ஒரு விண்கலம் அனுப்பி அது உண...

கொலையை தூண்டும் பேராசை எண்ணம்

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை அடுத்து, நகைக்கு ஆசைப்பட்டு செயின் பறிக்கும் சம்பவங்களும், கொலைகளும் அதிகம் நடந்து வருகின்றன. இதுபோன்ற சம்பவங்களில் பெரும்பாலும் திருடர்களும் கொள்ளையர்களும்தான் ஈடுபட்டு வந்தனர். தற்போது, உறவினர்களும் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். மதுரை அருகே நகைக்காக மாமியாரை கழுத்தை கயிறால் இறுக்கி கொலை செய்திருக்கிறார் மருமகள். அவரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை அருகே உள்ள திருநகரை சேர்ந்தவர் குமராண்டி. இவரது மனைவி முத்துப்பிள்ளை. 65 வயது மூதாட்டி. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு குமராண்டியை விட்டு பிரிந்த முத்துப்பிள்ளை, விளாச்சேரியில் தனியாக வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்தார். தனது நகைகளை விளாச்சேரியிலுள்ள வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைத்திருந்தார். லாக்கர் சாவியை தனது கழுத்தில் அணிந்திருக்கும் செயின்களுடன் சேர்த்து தொங்க விட்டிருப்பார். இவர், தனது  வீட்டில் கயிறால் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். நகைக்காக இவரை மர்மநபர்கள் கொலை செய்ததாக சந்தேகம் ஏற்பட்டது. இதற்கிடை...

அரசு நிலங்களை ஆக்கிரமித்தால் ‘குண்டாஸ்’ ச.சட்டநாதன்

சென்னை: அரசு நிலங்களை ஆக்கிரமித்து வீடுகளை கட்டுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்கிறது.  பல்வேறு மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அளித்துள்ள பரிந்துரையை ஏற்ற தமிழக அரசு, சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பு கட்டிடத்தை இடிப்பதற்கான செலவையும், ஆக்கிரமிப்பு நபரிடமே வசூலிக்கவும் திட்டமிட்டுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகவிருக்கிறது.பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப குடியிருப்புகள் பெருகாததால், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள அரசு புறம்போக்கு இடங்கள், மேய்க்கால் புறம்போக்கு, கைவேலி புறம்போக்கு போன்ற புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து வீடுகளை கட்டி குடியிருந்து வருகின்றனர். இதில் ஏரி புறம்போக்குகளில் வசிப்பவர்களுக்கு மட்டும் குறிப்பிட்ட ஆண்டுகள் கழித்து பட்டா வழங்கப்பட்டது. மற்ற புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. இந்நிலையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் அரசின் புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமிப்புகள் பெருகியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.  அரசு நிலங்களில் பெரிய அளவில் வீடுகளை கட்டி எந்த அச்சமுமின்றி ஆக்கிரமிப்பாளர்கள் வசித்து வருகின்றனர். ஆக்கிரமிப்பில் வீடு கட்...

பாகிஸ்தான் தேர்தலில் ஆச்சரியம் ! வாக்காளர்களை விட வாக்கு வாக்கு பதிவு அதிகம்

இஸ்லாமாபாத் : கடந்த 11ம் தேதி பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. பிரதமராக 3வது முறை நவாஸ் பதவியேற்க உள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் 8,119 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் 49 சாவடிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கையை விட, வாக்குப் பதிவு அதிகமாக நடந்துள்ளது. இதனால் தேர்தல் ஆணைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தேர்தலின் போது கள்ள வாக்கு பதிவு செய்யப்பட்டது, பல வாக்குச் சாவடிகள் கைப்பற்றப்பட்டன போன்ற குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இந்நிலையில் அதிக வாக்குகள் பதிவானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக பஞ்சாபில் 32 வாக்குச் சாவடிகள், சிந்துவில் 10, கைபர் பக்துன்கவா நகரில் 6 மற்றும் பலுசிஸ்தானில் ஒரு வாக்குச் சாவடிகளில் அளவுக்கதிகமாக வாக்குகள் பதிவாகி உள்ளன. ஒராங்கி, மாடல் காலனி, மலீர் காலனி, ஷா பைசல் காலனி போன்ற இடங்களில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிகளில்தான் இதுபோல் முறைகேடு நடந்துள்ளது. ஒரங்கி நகரில் ஒரு வாக்குச் சாவடியில் மொத்த வாக்காளர் எண்ணிக்...

ஐ.பி.எல் கிரிக்கெட் ஸ்பாட் பிக்சிங் புகார் : ஸ்ரீசாந்த் உள்பட 3 வீரர்கள் கைது

புதுடெல்லி : ஐபிஎல் கிரிக்கெட் ஸ்பாட் பிக்சிங் புகாரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் உள்பட 3 வீரர்களை டெல்லி போலீசார் நேற்று இரவில் அதிரடியாக கைது செய்தனர். அவர்களுடன் 7 புக்கிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐபிஎல் டி&20 கிரிக்கெட் போட்டிகள் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில்  சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் லெவன், புனே வாரியர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் என 9 அணிகள் விளையாடி வருகின்றன. தற்போது இந்த அணிக்கு இடையே லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற போட்டிகள் அடிப்படையில் மும்பை இந்தியன்ஸ் முதல் இடத்திலும், சென்னை சூப்பர்கிங்ஸ் 2ம் இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் 3ம் இடத்திலும் உள்ளன. இந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. நேற்று மும்பையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக் கொண்டன. இதில் மும்பை அணி வெற்றி பெற்றது.  இந்நிலையில் மும்பையில் தங்கியிருந்த ராஜஸ்...

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு 10 சதவீத வீடு, நிலம் ஒதுக்கீடு

வாஷிங்டன் : வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு பஞ்சாப் மாநில அரசு 10 சதவீதம் வீடு மற்றும் நிலம் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்துக்கு அமெரிக்க பஞ்சாபி அசோசியேஷன் பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வட அமெரிக்க பஞ்சாபி அசோசியேஷனை சேர்ந்த சாட்நாம் சிங் சாகல் கூறியதாவது: வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு நிலம் வழங்குவது குறித்து, பஞ்சாப் அரசு நல்ல முடிவை எடுத்துள்ளது. பஞ்சாப் துணை முதல்வர் சுக்பிர் சிங் பாதல் நேற்று இந்த திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்தை அரசு முழுமையாக செயல்படுத்த வேண்டும். வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அனைவருக்கும் பாரபட்சமின்றி வீடு, நிலம் வழங்க வேண்டும். நியாயமான அடிப்படையில் நீதியை நிலைநாட்டும் வகையில் நிலம், வீடு வழங்க வேண்டும். வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மற்றும் குடும்பத்தினர் அவர்களது சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாதுகாக்க அரசு தேவையான உதவி செய்யவில்லை என்பது வருத்தமாக உள்ளது. இவர்களுக்கு மாநில அரசு நிலம், வீடு வழங்குவது மட்டும் முக்கியம் அல்ல, அதை பாதுகாக்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்யவேண்டும். இவ்வாறு சாட்நாம் சிங் கூறின...

1 நாளுக்கு 1 லட்சம் சம்பளம் வாங்கும் குழந்தை நட்சத்திரம்

சென்னை: ‘சித்திரையில் நிலாச்சோறுÕ என்ற படத்தில் நடிக்க 1 நாளைக்கு ரூ.1 லட்சம் சம்பளம் வாங்கி நடித்தார் குழந்தை நட்சத்திரம் சாரா. ‘பயணங்கள் முடிவதில்லை‘, ‘வைதேகி காத்திருந்தாள்‘, ‘ராஜாதிராஜா‘ உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் ஆர்.சுந்தர்ராஜன். 12 வருடங்களுக்கு பிறகு தற்போது ‘சித்திரையில் நிலாச்சோறு‘ என்ற படத்தை இயக்கி உள்ளார். அவர் கூறியதாவது: சித்ரா பவுர்ணமியன்று வெட்டவெளியில் அமர்ந்து நிலாச்சோறு சாப்பிடும் வழக்கம் பல கிராமங்களில் இன்றும் நடைமுறையில் இருக்கிறது. அப்படியொரு தினத்தன்று எதிர்பாராத ஒரு சம்பவம் நடக்கிறது அது என்ன என்பதுடன், அம்மாவை இழந்த ஒரு  பெண் குழந்தையை தந்தை எப்படி கஷ்டப்பட்டு வளர்க்கிறார் என்பது கதையின் கரு. மலையாளத்தில் ‘ஆரஞ்ச்‘ படத்தில் நடித்த பிரகாஷ் ஹீரோ. ‘பேராண்மை‘ வசுந்தரா ஹீரோயின். ‘தெய்வத்திருமகள்‘ படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் சாரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்துக்கு நடிக்க தெரிந்த குழந்தை வேண்டும் என்பதற்காகவே சாராவை அழைத்து வந்தோம். 1 நாளைக்கு 1 லட்சம் ரூபாய் சம்பளம் தர வேண்டும் என்று அவரது பெற்றோர் கேட்டனர். அதற்கு சம்மதித்தோம். சம...