Skip to main content

Posts

கால் விரல் மூட்டுகளில் 2 கி.மீ நடந்து 8ம் வகுப்பு மாணவன் உலக சாதனை : ரத்தம் கசிந்தும் மனம் தளரவில்லை கருத்துகளை தெரிவிக்க

கோவை: கோவை சுந்தராபுரத்தை சேர்ந்த கார் டிரைவர் சண்முகசுந்தரம் மகன் ஸ்ரீசைலேஷ்(14). குனியமுத்தூர் நிர்மல்மாதா பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கிறார். கால்விரல்களை மடக்கி மூட்டுகளில் நடக்கப்போவதாக அறிவித்தார். கோவை சுந்தராபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டப வளாகத்தில் நேற்று இந்த நிகழ்ச்சி நடந்தது. ஒரு கிலோ மீட்டர் தூரத்தை கடக்கும் வரை ஓய்வெடுக்கவில்லை. 10 நிமிடம் மட்டுமே ஓய்வு எடுத்த பின்னர் நடக்க ஆரம்பித்தார். அடுத்த 400 மீட்டர் நடக்கும் போது சோர்ந்தாலும் தளரவில்லை. 1600 மீட்டர் தூரத்தை எட்டிய போது கால் விரல்களில் ரத்தம் கசிந்தது. தொடர்ந்து மாணவர் நடப்பாரா என்ற சந்தேகமும் ஏற்பட்டது.  மனம் தளராத ஸ்ரீசைலேஷ், 10 நிமிடம் ஓய்வெடுத்துக்கொண்டு கால்களில் பேண்டேஜ் துணிகளை சுற்றி மீதி தூரத்தையும் கடந்தார். ஒரு மணி நேரம் 2 வினாடிகளில்  சாதனையை முடித்தார். காலில் தொடர்ந்து ரத்தம் கசியவே சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டார். சாதனை நிகழ்ச்சியை எலைட் உலக சாதனை நிறுவனத்தின் ஆய்வாளர் ஸிரோன்வால் லால், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி(சிங்கப்பூர்) சேர்ந்த ஆய்வாளர் லாரன்ஜோ மைக்கேல் தாமஸ் ஆகிய...

பிலிம் சொருகினால் மாம்பழம் அழுகாது : நானோ டெக் ஆராய்ச்சி தீவிரம்

கோவை-: மாம்பழங்கள் கெடாமல் பாதுகாக்க நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சி நடந்து வருகிறது என்று வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: உற்பத்தியாகும் மாம்பழங்களில் 30 சதவீதம் அழுகி வீணாகிவிடுகின்றன. நானோ தொழில்நுட்பம் மூலம் நானோ பிலிம்களை மாங்காய்களில் புகுத்தினால், நீண்ட நாட்கள் கெடாமல் இருக்குமா என்று தீவிர ஆராய்ச்சி நடந்து வருகிறது. மாம்பழங்களில் கூன் வண்டுகள் புகுவதை தடுக்க இந்திய அணுசக்தி ஆணையம் மூலம் ஆராய்ச்சி விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது.  சிறு, குறு தானியங்களின் ஊட்டச்சத்துகளை அதிகரித்து தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுவினியோக திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் வினியோகிக்க கனடா ஆராய்ச்சி நிலையம், திட்டக்குழு ஆகியவை தமிழக அரசிடம் பரிந்துரைத்துள்ளது. இத்திட்டம் தற்போது தமிழக அரசின் பரிசீலனையில் உள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மானாவாரி நிலங்களில் சிறுதானிய பயிர்களில் உற்பத்தியை அதிகரிக்க வேளாண் பல்கலை, கர்நாடக பல்கலை, எம்எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி குழுமம் ஆய்வு செய்து வருகின்றன. தானியங்களில்  உமிநீக்கும் இயந்திரம் வடிவமைக்கப்ப...

வடகொரியாவில் பஞ்சம், பசி, பட்டினியால் விபரீதம் : குழந்தையை கொன்று வேகவைத்து தின்ற தந்தை

ஒசாகா : வடகொரியாவில் பட்டினியால் தவித்த தந்தை, தனது மகன்களை கொன்று அவர்களது உடல்களை வேகவைத்து சாப்பிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. வடகொரியாவில் பஞ்சம் தலைவிரித்தாடுவதாகவும், பட்டினியால் கிடக்கும் பலர் விபரீத முடிவுகளை எடுப்பதாகவும் ஏசியா பிரஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தி இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் பிரபல சண்டே டைம்ஸ் பத்திரிகையிலும் வெளியாகியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: வடகொரியா ஏவுகணை சோதனை நடத்த அமெரிக்கா உள்பட பல நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், அணு ஆயுத சோதனையிலும் வடகொரியா ஈடுபடுவதாக பல நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதனால், இந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக பஞ்சம் ஏற்பட்டுள்ளதாகவும் பல இடங்களில் மக்கள் பட்டினியில் தவிப்பதாகவும் பல ஆண்டுகளாக பரபரப்பு செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இந்நிலையில், பட்டினியில் தவித்த ஒருவர் உணவுக்காக கல்லறையில் இருந்து பேரன் சடலத்தை தோண்டி எடுத்துள்ளார். இன்னொருவர் தனது குழந்தையை சாகடித்து வேகவைத்து சாப்பிட்டுள்ளார். இப்போது 2 குழந்தைகளை கொன்று சமைத்த...

கேரளாவில் அதிசயம் குட்டி போட்டது கோழி : தொப்புள் கொடியோடு பிறந்தது

காசர்கோடு : கோழிகள் முட்டைதான் போடும். கேரள மாநிலம் காசர்கோட்டில் கோழி குட்டி போட்ட அதிசய சம்பவம் நடைபெற்றுள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு அடுத்த செருவந்தூர், சீமேனி பகுதியை சேர்ந்தவர் பத்ரன். இவரது மனைவி மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர். கேரள அரசு சுயஉதவி குழு உறுப்பினர்களுக்கு இலவசமாக வழங்கிய ஒரு பெட்டைக்கோழி இவர்களது வீட்டில் உள்ளது. இந்த கோழி தினமும் முட்டையிட்டு வந்தது. ஆனால் அடைகாப்பதே கிடையாது. நேற்று மாலை வீட்டு முற்றத்தில் மேய்ந்து கொண்டிருந்த அந்த கோழி ஒரு ‘கோழிக்குட்டியை’ பிரசவித்தது. இதை பத்ரனின் மனைவி வீட்டில் உள்ளவர்களை கூப்பிட்டு காட்டியுள்ளார். தொப்புள் கொடியோடு பிறந்த கோழிக்குட்டியை தாய்க்கோழி கவனிக்காது சென்று விட்டது. வீட்டில் இருந்தவர்கள் அந்த கோழிக்குட்டியை சுத்தம் செய்து வெதுவெதுப்புக்காக துணியில் வைத்து பாதுகாத்தனர். அது தற்போது நல்ல நிலையில் உள்ளது. கோழி ‘குட்டி’ போட்ட அதிசயம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்துவிட்டு செல்கின்றனர். கோழி குட்டி போட்டது பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டமா, சுற்றுச்சுழலில் ஏற்பட்...

வாழையடி வாழையாக வஞ்சம் தொடர்வதா?

பழிக்குப் பழியாக நடக்கும் கொலை சம்பவங்கள் எப்போதும் முடிவுக்கு வருவதில்லை. தொடர்கதை போல் மாறி மாறி இரு தரப்பிலும் ஆட்கள் பலியாகிக் கொண்டே இருப்பார்கள். இதனால் எத்தனையோ குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ளன. இருந்தாலும் தூக்கிய அரிவாளை கீழே வைக்க மாட்டார்கள். அதிலும் தென் மாநிலங்களில் இதுபோன்ற பழிக்குப் பழி கொலைகள் அதிகமாகவே நடக்கின்றன. நெல்லையில் ஒரே நாளில் 2 கொலைகள் விழுந்துள்ளன. நெல்லை தாழையூத்து அருகேயுள்ள மேலபால மடையை சேர்ந்தவர் விஜயராஜ். கட்டிட தொழிலாளி. 10 நாட்களுக்கு முன்புதான்  திருமணம் நடந்தது. ஒரு வீட்டில் கட்டுமான பணி செய்து கொண்டிருந்தபோது 4 பைக்கில் வந்த 8 பேர் கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது. இதில் படுகாயமடைந்த அவர் இறந்தார். ஆத்திரமடைந்த உறவினர்கள் கொலையாளிகள் தரப்பை சேர்ந்த 2 வீடுகள், கடைகளை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். அப்போது  தெருவில் வந்து கொண்டிருந்த டீக்கடை உரிமையாளர் மணி என்பவரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தனர். அங்கு பதற்றம் நீடிப்பதால் ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விஜயராஜ் மற்றும் அவரது ...

அமைச்சர் காரை நிறுத்திய டிராபிக் போலீசுக்கு அடி, உதை : போலீஸ்காரர்கள் கைது

ஸ்ரீநகர் :காஷ்மீர் மாநிலத்தில் அமைச்சரின் காரை நிறுத்திய டிராபிக் போலீசுக்கு அடி, உதை விழுந்தது. இது தொடர்பாக அமைச்சரின் பாதுகாப்புக்கு வந்த 2 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டனர். காஷ்மீர் மாநிலத்தில் நீர்பாசனத் துறை அமைச்சராக இருப்பவர் தாஜ் மொய்தீன். ஸ்ரீநகரின் லால் சவுக்கில் நேற்று மதியம் காரில் சென்று கொண்டிருந்தார். அவரது காருக்கு பாதுகாப்பாக முன்னும் பின்னும் கார்கள் சென்றன. ஒரு சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. மற்ற வாகனங்கள் சிக்னலுக்காக காத்திருக்க அமைச்சரின் கார் படை நிற்காமல் சென்றது. அங்கு பணியில் இருந்த டிராபிக் எஸ்ஐ மோகன்லால், இதை பார்த்தார். அதிரடியாக முன்னால் சென்று காரை மடக்கி நிறுத்தினார். ‘டிராபிக் விதிகள் எல்லோருக்கும் பொதுவானதுதான். ஏன் காரை நிறுத்தாமல் சென்றாய்Õ என கார் டிரைவரிடம் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது, காரில் இருந்து விறுவிறுவென இறங்கிய அமைச்சரின் பாதுகாப்புக்கு வந்த போலீஸ்காரர்கள், மோகன்லாலை சரமாரியாக தாக்கினர். இதில் அவரது இடது கண்ணில் பலத்த அடிபட்டு ரத்தம் கொட்டியது. அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்...

கொலைகாரனாக்கிய குடி மயக்கம்

சரக்கு உள்ளே போய் விட்டால் மாமா, மச்சினன் தெரியாது, நண்பன் யார் எனத் தெரியாது. அந்த அளவுக்கு மயக்கத்தில் இருப்பார்கள். அந்த மயக்கத்தில் சண்டை போடுவதும், தகராறு செய்வதும் நடக்கும். ஆனால் போதையில் ஏற்பட்ட தகராறில் மீன்வெட்டும் கத்தியால் நண்பனை சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டார் ஒருவர். கொலை செய்யப்பட்டவருக்கு திருமணமாகி 3 மாதம்தான் ஆகிறது என்பது கூடுதல் பரிதாபம். சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் அருண் என்ற பென்னி. வானகரத்தில் உள்ள மார்க்கெட்டில் மீன் வாங்குவோருக்கு அதை சுத்தம் செய்து கொடுப்பார்.  அதே பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவரும் அதே வேலை செய்கிறார். இருவரும் நண்பர்கள். தினமும் மாலையில் வேலை முடிந்ததும் ஒன்றாக மது குடிக்க செல்வார்கள். வழக்கம்போல் இருவரும் டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றனர். போதை அதிகமானதும் பாரில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் வீட்டிற்கு நடந்து சென்றனர். வரும் வழியில் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் பார்த்திபன் இடுப்பில் வைத்திருந்த மீன்வெட்டும் கத்தியை எடுத்து அருணின் கழுத்து, முகம், வயிற்று பகுதியில் சர...