Skip to main content

Posts

கேரளாவில் அதிசயம் குட்டி போட்டது கோழி : தொப்புள் கொடியோடு பிறந்தது

காசர்கோடு : கோழிகள் முட்டைதான் போடும். கேரள மாநிலம் காசர்கோட்டில் கோழி குட்டி போட்ட அதிசய சம்பவம் நடைபெற்றுள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு அடுத்த செருவந்தூர், சீமேனி பகுதியை சேர்ந்தவர் பத்ரன். இவரது மனைவி மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர். கேரள அரசு சுயஉதவி குழு உறுப்பினர்களுக்கு இலவசமாக வழங்கிய ஒரு பெட்டைக்கோழி இவர்களது வீட்டில் உள்ளது. இந்த கோழி தினமும் முட்டையிட்டு வந்தது. ஆனால் அடைகாப்பதே கிடையாது. நேற்று மாலை வீட்டு முற்றத்தில் மேய்ந்து கொண்டிருந்த அந்த கோழி ஒரு ‘கோழிக்குட்டியை’ பிரசவித்தது. இதை பத்ரனின் மனைவி வீட்டில் உள்ளவர்களை கூப்பிட்டு காட்டியுள்ளார். தொப்புள் கொடியோடு பிறந்த கோழிக்குட்டியை தாய்க்கோழி கவனிக்காது சென்று விட்டது. வீட்டில் இருந்தவர்கள் அந்த கோழிக்குட்டியை சுத்தம் செய்து வெதுவெதுப்புக்காக துணியில் வைத்து பாதுகாத்தனர். அது தற்போது நல்ல நிலையில் உள்ளது. கோழி ‘குட்டி’ போட்ட அதிசயம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்துவிட்டு செல்கின்றனர். கோழி குட்டி போட்டது பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டமா, சுற்றுச்சுழலில் ஏற்பட்...

வாழையடி வாழையாக வஞ்சம் தொடர்வதா?

பழிக்குப் பழியாக நடக்கும் கொலை சம்பவங்கள் எப்போதும் முடிவுக்கு வருவதில்லை. தொடர்கதை போல் மாறி மாறி இரு தரப்பிலும் ஆட்கள் பலியாகிக் கொண்டே இருப்பார்கள். இதனால் எத்தனையோ குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ளன. இருந்தாலும் தூக்கிய அரிவாளை கீழே வைக்க மாட்டார்கள். அதிலும் தென் மாநிலங்களில் இதுபோன்ற பழிக்குப் பழி கொலைகள் அதிகமாகவே நடக்கின்றன. நெல்லையில் ஒரே நாளில் 2 கொலைகள் விழுந்துள்ளன. நெல்லை தாழையூத்து அருகேயுள்ள மேலபால மடையை சேர்ந்தவர் விஜயராஜ். கட்டிட தொழிலாளி. 10 நாட்களுக்கு முன்புதான்  திருமணம் நடந்தது. ஒரு வீட்டில் கட்டுமான பணி செய்து கொண்டிருந்தபோது 4 பைக்கில் வந்த 8 பேர் கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது. இதில் படுகாயமடைந்த அவர் இறந்தார். ஆத்திரமடைந்த உறவினர்கள் கொலையாளிகள் தரப்பை சேர்ந்த 2 வீடுகள், கடைகளை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். அப்போது  தெருவில் வந்து கொண்டிருந்த டீக்கடை உரிமையாளர் மணி என்பவரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தனர். அங்கு பதற்றம் நீடிப்பதால் ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விஜயராஜ் மற்றும் அவரது ...

அமைச்சர் காரை நிறுத்திய டிராபிக் போலீசுக்கு அடி, உதை : போலீஸ்காரர்கள் கைது

ஸ்ரீநகர் :காஷ்மீர் மாநிலத்தில் அமைச்சரின் காரை நிறுத்திய டிராபிக் போலீசுக்கு அடி, உதை விழுந்தது. இது தொடர்பாக அமைச்சரின் பாதுகாப்புக்கு வந்த 2 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டனர். காஷ்மீர் மாநிலத்தில் நீர்பாசனத் துறை அமைச்சராக இருப்பவர் தாஜ் மொய்தீன். ஸ்ரீநகரின் லால் சவுக்கில் நேற்று மதியம் காரில் சென்று கொண்டிருந்தார். அவரது காருக்கு பாதுகாப்பாக முன்னும் பின்னும் கார்கள் சென்றன. ஒரு சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. மற்ற வாகனங்கள் சிக்னலுக்காக காத்திருக்க அமைச்சரின் கார் படை நிற்காமல் சென்றது. அங்கு பணியில் இருந்த டிராபிக் எஸ்ஐ மோகன்லால், இதை பார்த்தார். அதிரடியாக முன்னால் சென்று காரை மடக்கி நிறுத்தினார். ‘டிராபிக் விதிகள் எல்லோருக்கும் பொதுவானதுதான். ஏன் காரை நிறுத்தாமல் சென்றாய்Õ என கார் டிரைவரிடம் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது, காரில் இருந்து விறுவிறுவென இறங்கிய அமைச்சரின் பாதுகாப்புக்கு வந்த போலீஸ்காரர்கள், மோகன்லாலை சரமாரியாக தாக்கினர். இதில் அவரது இடது கண்ணில் பலத்த அடிபட்டு ரத்தம் கொட்டியது. அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்...

கொலைகாரனாக்கிய குடி மயக்கம்

சரக்கு உள்ளே போய் விட்டால் மாமா, மச்சினன் தெரியாது, நண்பன் யார் எனத் தெரியாது. அந்த அளவுக்கு மயக்கத்தில் இருப்பார்கள். அந்த மயக்கத்தில் சண்டை போடுவதும், தகராறு செய்வதும் நடக்கும். ஆனால் போதையில் ஏற்பட்ட தகராறில் மீன்வெட்டும் கத்தியால் நண்பனை சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டார் ஒருவர். கொலை செய்யப்பட்டவருக்கு திருமணமாகி 3 மாதம்தான் ஆகிறது என்பது கூடுதல் பரிதாபம். சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் அருண் என்ற பென்னி. வானகரத்தில் உள்ள மார்க்கெட்டில் மீன் வாங்குவோருக்கு அதை சுத்தம் செய்து கொடுப்பார்.  அதே பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவரும் அதே வேலை செய்கிறார். இருவரும் நண்பர்கள். தினமும் மாலையில் வேலை முடிந்ததும் ஒன்றாக மது குடிக்க செல்வார்கள். வழக்கம்போல் இருவரும் டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றனர். போதை அதிகமானதும் பாரில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் வீட்டிற்கு நடந்து சென்றனர். வரும் வழியில் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் பார்த்திபன் இடுப்பில் வைத்திருந்த மீன்வெட்டும் கத்தியை எடுத்து அருணின் கழுத்து, முகம், வயிற்று பகுதியில் சர...

ஆட்டோமொபைல் டிசைனிங் துறைக்கு மவுசு

ஆட்டோமொபைல் துறை உலகின் தவிர்க்க முடியாத துறைகளில் முதன்மை நிலையில் கொடி கட்டி பறக்கிறது. நாளுக்கு நாள் எண்ணற்ற மாற்றங்களுடன் தனக்கான பொலிவை தக்க வைத்துக்கொள்ளும் இத்துறையில் வேலைவாய்ப்புக்கு பஞ்சம் இல்லை. ஆட்டோமொபைல் டிசைனிங் தொடர்பான படிப்புகளுக்கு மாணவ, மாணவிகள் மத்தியில் மவுசு அதிகம். உலக அளவில் இதற்கான நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு லட்சங்களில் ஊதியத்துடன் வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இந்தியாவை பொறுத்த வரை சில முக்கிய கல்வி நிறுவனங்கள், பலவிதமான போக்குவரத்து  மற்றும் ஆட்டோமொபைல் வடிவமைப்பு படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளன. அகமதாபாத்தில் செயல் பட்டும் வரும் தேசிய வடிவமைப்பு கல்வி நிறுவனமானது (ழிமிஞி) போக்குவரத்து  மற்றும் ஆட்டோமொபைல் வடிவமைப்பில் இரண்டரை வருட முதுநிலை படிப்பை வழங்குகிறது.  போக்குவரத்து மற்றும் ஆட்டோமோடிவ் துறையில் சிறந்த தொழில்முறை நிபுணராவதற்கு  இப்படிப்பு  உதவுகிறது. மேலும் இப்படிப்பில் ஆட்டோமொபைல்களை வடிவமைக்க மட்டுமே பயிற்சி அளிக்கப்படுவதில்லை. மாறாக அனைத்து வகை வாகனங்களையும் வடிவமைக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்படிப்பை முடித்தால்...

அஞ்சல் வழியில் அக்குபஞ்சர் படிப்பு

அக்குபஞ்சர் என்பது பண்டைய காலம் தொட்டு கடைபிடிக்கப்படும் மருத்துவ முறை என்பதுடன் இதில் பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்பது சிறப்பம்சமாக கருதப்படுகிறது. நோய்களுக்கு தக்கவாறு துல்லிய முனை கொண்ட ஊசிகளை உடலில் செருகி சிகிச்சை அளிப்பதே அக்குபஞ்சர் சிகிச்சை முறை. சமீப காலமாக இயற்கை சார்ந்த மருத்துவங்களை மக்கள் விரும்ப தொடங்கியுள்ளனர். சித்தா, ஹோமியோபதி, யுனானி, ஆயுர்வேதம், அக்குபஞ்சர் போன்ற மருத்துவ முறைகளை நாடத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே இயற்கை முறை மருத்துவத்தில் பட்டப்படிப்பு பெற்றவர்கள் கூடுதல் தகுதியாக அக்குபஞ்சர் சிகிச்சை தொடர்பான படிப்பை மேற்கொள்கின்றனர். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால் அக்குபஞ்சர் மருத்துவமனைகளும் மாவட்டங்கள் தோறும் அதிகரித்து வருகின்றன. வெளிநாடுகளிலும் இந்த சிகிச்சை முறைக்கு கடும் கிராக்கி உள்ளது. சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் பெரும்பாலும் அக்குபஞ்சர் மூலமாகவே தீராத நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்திரா காந்தி தேசிய திறந்த வெளி பல்கலைக் கழகம் (இக்னோ) டெல்லியிலுள்ள அக்குபஞ்சர் மற்றும் இயற்கை மருத்துவ  நிறுவனத்துடன்  இணைந்து அக்குபஞ்...

சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க டிப்ஸ்

பத்து மணிக்கு மேல் வெளியில் தலை காட்டவே மககள் பயப்படுகின்றனர். வெயில் மண்டையைப் பிளக்கிறது. அரை மணி நேரம் வெயிலில் செல்ல நேர்ந்தால் கண் எரிச்சல், தோல் வறட்சி, வியர்வை, உடல் சோர்வு, சிறுநீர் தொற்று என பல பிரச்னைகள் வாட்டுகிறது. இது போன்ற சங்கடங்களில் இருந்து காத்துக் கொள்ள ஆலோசனை சொல்கிறார் தோல் சிகிச்சை நிபுணர் டாக்டர் விக்னேஷ்வரி.  வெயில் நேரத்தில் எந்தப் பாதுகாப்பும் இன்றி வெளியில் செல்வதால் வியர்வை சங்கடத்தை ஏற்படுத்தும். தோல் வறட்சி காணப்படும். மேலும் வியர்வை அதிகரிப்பால் ஏற்கனவே தோல் பகுதியில் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு அரிப்பு அதிகரிக்கும். அக்குள் மற்றும் முதுகுப் பகுதியில் இந்த அரிப்பு காணப்படும். உடல் சூட்டின் காரணமாக வெயில் கொப்புளம் மற்றும் வியர்குரு போன்ற தொல்லைகள் உண்டாகும்.  உடல் இயல்பான தட்பவெப்ப நிலைகளில் தோல் வியர்வை மூலம் இயற்கையாகவே வெப்ப மாறுபாடுகளை சரி செய்து விடும். நீண்ட நேரம் அதிக வெப்பநிலையில் இருக்கும் போது உடல் வெப்பக் கட்டுப்பாட்டு செயலிழக்கிறது. இதுவே பல்வேறு பிரச்னைகளுக்கும் காரணம் ஆகும். கடும் வெப்பத்தின் காரணமாக வலியுடன் கூடிய வெப்பத் தசையிழ...