Saturday, 26 April 2014

மருத்துவ ஆய்வில் மகத்தான சாதனை: மனித தோலில் இருந்து குருத்தணுக்கள் உருவாக்கும் முயற்சி வெற்றி

                               மருத்துவ ஆய்வில் மகத்தான சாதனை: மனித தோலில் இருந்து குருத்தணுக்கள் உருவாக்கும் முயற்சி வெற்றி

லண்டன்:மனித தோலில் உள்ள அணுக்களில் இருந்து குருத்தணுக்களை (ஸ்டெம் ஸெல்) உருவாக்கும் நெடுநாள் ஆராய்ச்சியில் அமெரிக்க- ஜப்பானிய மருத்துவ ஆராய்ச்சி குழுவினர் வெற்றியடைந்துள்ளனர்.

பிறந்த குழந்தையின் வயிற்றில் இருக்கும் தொப்புள் கொடியில் தாயின் கருப்பயில் வளர்ந்த ஏராளமான குருத்தணுக்கள் தேங்கியுள்ளன. எனவே, இவற்றை சேமித்து வைப்பதன் மூலம் பின்நாட்களில் அந்த குழந்தை முதுமை அடையும்போது ஏற்படும் கொடிய நோயின் தாக்கத்தை எதிர்த்து போராட இந்த குருத்தணுக்களை பயன்படுத்த முடியும் என மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

இதையும் கடந்து, செயற்கை முறையில் குருத்தணுக்களை உருவாக்கும் ஆராய்ச்சியில் மாசாச்சூசெட்ஸ் மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னேறிய குருத்தணு ஆராய்ச்சி கூடத்தில் பணியாற்றும் அமெரிக்கா மற்றும் ஜப்பானை சேர்ந்த டாக்டர்கள் கூட்டாக ஈடுபட்டிருந்தனர்.

இதற்காக பரிசோதனை கூடத்தில் வளர்க்கப்படும் எலிகளின் மேல்தோலில் உள்ள உயிரணுக்களை எடுத்து வீரியம் குறைந்த சிட்ரிக் அமிலக் கலவையில் சுமார் அரை மணி நேரம் ஊற வைத்து காத்திருந்தபோது அந்த வியத்தகு மாற்றம் நிகழ்ந்தது.

அமிலத்தில் ஊறிய அந்த உயிரணுக்களில் இருந்து புதிய கரு முளை (எம்ப்ரியோ) உருவானது. இந்த கருமுளையை வைத்து குருத்தணுவை உருவாக்கும் சோதனை முயற்சியும் வெற்றி பெற்றதால், இதே முறையில் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மனித தோலையும் சோதித்து பார்த்தனர்.

இதிலும், எலியின் தோலில் இருந்து எடுக்கப்பட்ட உயிரணுவில் நிகழ்ந்த அதே மாற்றம் ஏற்பட்டதை கண்ட ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர்.

இப்படி செயற்கை முறையில் உருவாக்கி உயிரூட்டப்படும் குருத்தணுக்களை கொண்டு பார்கின்சன் நோய் எனப்படும் முதியோர்களுக்கு உண்டாகும் நடுக்குவாதம் உள்பட இதய நோய் வரை பல பாதிப்புகளுக்கு நோயாளியின் தோலை கொண்டே சிகிச்சை அளிக்க முடியும் என்பது குறிப்பிடத் தக்கது.

எனினும், இந்த வியத்தகு மருத்துவ முன்னேற்றத்தில் சில பின்னடைவுகளும் இருப்பதாக பாஸ்டன் நகரில் உள்ள பிரிகாம் மகளிர் மருத்துவமனையில் திசு பொறியாளராக பணியாற்றும் டாக்டர் சார்லஸ் வகண்ட்டி கூறுகிறார்.

இந்த நவீன மருத்துவ தொழில்நுட்பத்தின் மூலம் மனித தோலில் இருந்து உயிரணுக்களை சேகரித்து, அதனை குருத்தணுவாக மாற்றி, அந்த குருத்தணுவின் மூலம் கிடைக்கும் கரு முளையை வளர வைத்து, அவற்றை மனித விந்தாகவும்,  கருமுட்டையாகவும் விரைவில் மாற்றிவிட முடியும்.

இப்படி தயாரிக்கப்படும் விந்துடன் கருமுட்டையை செயற்கையாக இணைத்து ‘குளோனிங்’ முறையில் சிலர் மனித உயிர்களை உருவாக்க முயற்சித்தால் அது மனித குலத்துக்கே பெரிய தீங்காக அமைந்து விடும். பலவீனமடைந்து விட்ட மனித திசுக்களுக்கு புத்துணர்வு அளித்து, கொடிய நோய்களை எதிர்த்து போராட உதவும் குருத்தணு மேம்பாட்டு ஆராய்ச்சியானது மரணத்தில் இருந்து உயிர்களை காப்பாற்றி, ஆயுளை நீட்டிக்க உதவும் என்பது உண்மைதான்.

இருப்பினும், இந்த ஆராய்ச்சியின் வெற்றியானது, எதிர்பார்த்ததற்கு மாறான எதிர்விளைவையும் ஏற்படுத்தி விடும் ஆபத்தும் உள்ளது என அவர் எச்சரிக்கிறார்.

நியூசிலாந்து கடற்பகுதியில் பிடிபட்ட அபூர்வ வகை ‘கண்ணாடி மீன்’

நியூசிலாந்து கடற்பகுதியில் பிடிபட்ட அபூர்வ வகை ‘கண்ணாடி மீன்’


வெலிங்டன், உலகில் மிக அபூர்வமாக தென்படும் அரியவகை ‘கண்ணாடி மீன்’ நியூசிலாந்தை சேர்ந்த ஒரு மீனவரின் வலையில் சிக்கியுள்ளது.

நியூசிலாந்தின் வடபகுதியில் உள்ள கரிகரி வளைகுடா பகுதியில் அந்நாட்டை சேர்ந்த ஃப்ரேஸர் என்பவர் தனது மகன்களுடன் மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது கடல் நீரின் மேற்பரப்பில் கண்ணாடி போன்ற பளபளப்பான ஏதோ ஒரு அழகிய பொருள் நெளிந்து, நெளிந்து செல்வதை கண்டு வியப்படைந்த அவர், தனது கைவலையை லாவகமாக வீசி அந்த அபூர்வ மீனை சிறைபிடித்தார்.

அதனை சோதனையிட்ட கடல் உயிரியல் ஆய்வக அதிகாரிகள் பிடிபட்ட இந்த அரியவகை மீன், 'ஸல்பா மகியோர்’ என்ற இறால் வகை மீன் இனத்தை சேர்ந்தது என்றும், மிக அபூர்வமாகவே இவை கடலின் மேற்பரப்பில் தென்படும் என்றும் கூறியுள்ளனர்.

'முழுக்க முழுக்க கண்ணாடி போன்ற வடிவில் உள்ள இந்த மீனின் உடல் வழியாக ஊடுருவி, எதிர்புறத்தில் உள்ள பொருட்களை துல்லியமாக பார்க்க முடிகிறது. முதுகெலும்பு இல்லாத இந்த மீனின் இரைப்பை பகுதியில் உள்ள ஆரஞ்சு நிற அழுக்கு மட்டும் 'பளிச்’ என்று வெளியே தெரிகிறது’ என்று இந்த மீனை பிடித்தவரின் மகன்களில் ஒருவனான ஃபின் என்ற சிறுவன் ஆச்சரியத்துடன் கூறுகிறான்.

ரத்தத்தில் சர்க்கரையை கட்டுபடுத்தும் கொய்யா

No one can be ignorant of koyyakkani flavor. Guava housing estates, farm grown varappukalilum maravakaiyakum

கொய்யாக்கனியின் சுவையை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கொய்யா வீட்டுத் தோட்டங்களிலும், வயல் வரப்புகளிலும் வளர்க்கப்படும்  மரவகையாகும். இது இந்தியா, இலங்கை, மியான்மர் நாடுகளில் அதிகம் வளர்க்கப்படுகிறது. இதற்கு ஜாம்பலா, கோவா, பலாம்பர் என்ற பெயர்களும்  உண்டு. கொய்யா முக்கனியான மா, பலா, வாழை இவற்றிக்கு இணையாக வர்ணிக்கப்படும் பழமாகும். மிகக் குறைந்த விலையில் அதிக சத்துக்களைத்  தன்னகத்தே கொண்ட பழம் இது. 


கொய்யா கோடைக்காலங்களில் தான் அபரிமிதமாக விளையும். தற்போது உயிரி தொழில் நுட்ப முறையில் வருடம் முழுவதும் உற்பத்தி செய்யப்பட்டு  விற்பனைக்கு வருகிறது.கொய்யாவில் பலவகைகள் உள்ளன. தற்போது விற்பனைக்கு வரும் பழங்களில் உள் சதைப்பகுதி வெள்ளை மற்றும் சிவப்பு  நிறங்களில் உள்ளன. ஒரு சில வகை கொய்யாவின் சதைப்பகுதி ரோஸ் நிறத்தில் காணப்படும். இவை அனைத்தின் மருத்துவப் பயனும் ஒன்றுதான்.  கொய்யாக்கனியின் சுவையைப் போல் அதன் மணமும் ரம்மியமாக இருக்கும். இதில் அதிகளவு வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.  குறிப்பாக நெல்லிக்கனிக்கு அடுத்த நிலையில் வைட்டமின் சி சத்து கொண்ட பழம் கொய்யாதான்.
மருத்துவப் பயன்கள்
மலச்சிக்கல் தீரும்: நோயின் ஆரம்பமே மலச்சிக்கல்தான். அனைத்து நோய்களின் தாக்கமும் மலச்சிக்கலில் இருந்துதான் ஆரம்பிக்கும். மலச்சிக்கலைப்  போக்கினாலே நோயில்லா நல்வாழ்வு வாழலாம் என்பது சித்தர்களின் கூற்று. நன்கு கனித்த கொய்யாப் பழத்தை இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு  வந்தால் மலச்சிக்கல் நீங்கும். குடலின் செரிமான சக்தி அதிகரிக்கும்.
வயிற்றுப்புண் ஆறும்: தற்போதைய உணவுகளில் அதிகம் வேதிப் பொருட்கள் கலந்திருப்பதால் அவை அஜீரணத்தை உண்டாக்கி வயிற்றுப் புண்ணை  ஏற்படுத்துகிறது. இதனைப் போக்க உணவுக்குப்பின் கொய்யாப்பழம் சாப்பிடுவது மிக நல்லது. மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் இப்பழத்தை  தொடர்ந்து உண்டு வந்தால் மூல நோயிலிருந்து விடுபடலாம்.
கல்லீரல் பலப்படும்: உடலின் சேமிப்புக் கிடங்கான கல்லீரல் பாதிக்கப்பட்டால், உடலின் பித்தத்தின் தன்மை மாறுபடும். இதனால் உடல் பல  பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும். இதை தவிர்த்து கல்லீரலை பலப்படுத்த கொய்யாப்பழத்தை அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது.
நீரிழிவு நோயாளிகளுக்குநீரிழிவு நோயின் தாக்கம் கண்டாலே அதை சாப்பிடக் கூடாது இதை சாப்பிடக் கூடாது என்ற கட்டுப்பாடுகள்  பாடாய்ப்படுத்தும். ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு உண்டாகும் பாதிப்புகளை குறைக்க கொய்யாப்பழம் உகந்தது. மேலும் ரத்தத்தில் சர்க்கரையின்  அளவை கட்டுப்படுத்தும் தன்மையும் உண்டு.
ரத்தச்சோகை மாறும்: ரத்தத்தில் இரும்புச்சத்து குறைவதால் ரத்தச்சோகை உண்டாகிறது. இந்தியக் குழந்தைகளில் அதுவும் பெண் குழந்தைகளில் 63.8  சதவீதம் குழந்தைகள் ரத்தச்சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இக்குறையை பழங்களும் கீரைகளும்  நிவர்த்தி செய்யும். இதில் குறிப்பாக கொய்யாப்பழம் ரத்தச்சோகையை மாற்றும் தன்மை கொண்டது.
குழந்தைகளின் வளர்ச்சிக்கு: குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின் சி சத்து கொய்யாப்பழத்தில் அதிகம் உள்ளது. குழந்தைகளுக்கு  அளவோடு கொய்யப்பழத்தைக் கொடுத்து வந்தால் குழந்தைகளின் எலும்புகள் பலப்படும். பற்கள் பலமடையும். நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும்.குழந்தைகளுக்கு அறிவுத்திறன் அதிகரிக்கும். சொறி, சிரங்கு போன்ற சரும நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொய்யாவுக்கு உண்டு. நரம்புகளைப்  பலப்படுத்தும். உடலின் உஷ்ணத்தைக் குறைக்கும்.
கொழுப்பைக் குறைக்கும்: அதிக ரத்த அழுத்தம், அதிக கொழுப்பை குறைக்கும் தன்மை கொய்யாவுக்கு உண்டு. தினமும் இரண்டு கொய்யாப்பழம்  உண்டு வந்தால் கொலஸ்டிரால் குறையும் என இந்திய இருதய ஆராய்ச்சி நிறுவனம் ஆராய்ச்சி செய்து தெரிவித்துள்ளது.
இதய படபடப்பு நீங்கும்: ஒரு சிலருக்கு சிறிது வேலை செய்தால் கூட இதயம் படபடப்பு உண்டாகிவிடும். உடலில் வியர்வை அதிகம் தோன்றும். இது  இதய நோயின் அறிகுறியாகக்கூட அமையலாம். இந்த படபடப்பைக் குறைக்க கொய்யாப்பழம் மிகவும் உகந்தது. இதய படபடப்பு உள்ளவர்கள் தினம்  ஒரு கொய்யாப்பழம் உண்பது நல்லது.



பிச்சைக்காரன் என்று நினைத்து ரஜினிகாந்துக்கு 10 ரூபாய் தர்மம் செய்த பெண்

பிச்சைக்காரன் என்று நினைத்து ரஜினிகாந்துக்கு 10 ரூபாய் தர்மம் செய்த பெண்





சென்னி, டிச.15 ரஜினிகாந்தின் பிறந்த நாளையொட்டி அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களை தொகுத்து பிரபல கண் டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த் ஓர் புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அந்த புத்தகத்தில் ரஜினிகாந்த சந்தித்த ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தை அவர் பதிவு செய்துள்ளார்.
  
பெங்களூரில் உள்ள பிரசித்தி பெற்ற கோயிலுக்கு குஜராத்தை சேர்ந்த ஒரு பெண்மணி தரிசனத்துக்காக வந்திருந்தார்.

கோயில் தூணின் ஓரமாக சாய்ந்து அமர்ந்திருந்த ஒருவரின் தோற்றத்தை கண்டு இரக்கப்பட்ட அந்த பெண் தனது கைப்பையில் இருந்து 10 ரூபாயை எடுத்து அவருக்கு தர்மமாக போட்டார்.

எப்போதும் போல் எளிமையான உடையில் தரிசனத்துக்காக வந்து தூணின் மேல் சாய்ந்து அமர்ந்திருந்த ரஜினிகாந்துக்கு அந்த பெண்ணின் செயல் அதிர்ச்சியை அளித்தது. இருப்பினும், அதை வெளிப்படுத்திக்கொள்ளாத ரஜினிகாந்த் அந்த 10 ரூபாயை வாங்கிக்கொண்டு அமைதியாக கோயிலுக்குள் சென்றார்.

சிறுது நேரம் கழித்து தரிசனம் முடிந்ததும் தனது காரை நோக்கி தனக்கே உரித்தான மிடுக்கான நடையில் அவர் சென்றபோது அவரை அடையாளம் கண்டுகொண்ட அந்த பெண் நடந்த தவறுக்காக ரஜினிகாந்திடம் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார்.

அந்த சம்பவத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்று கூறிய ரஜினிகாந்த், சற்றும் அலட்டிக்கொள்ளாமல் அந்த பெண்ணிடம் சாவகாசமாக சொன்னார்.. 'அம்மா, என்னுடைய நிரந்தரமான இடம் எதுன்னு அப்பப்போ.. கடவுள் எனக்கு நினைவுப்படுத்திக்கிட்டே இருப்பாரு. இப்ப.. உங்க மூலமா எனக்கு 10 ரூபாய் பிச்சை போட்டு மறுபடியும் நான் சூப்பர் ஸ்டார் இல்லைன்னுற உண்மையை எனக்கு அவர் உணர்த்தி இருக்காரு' என்று ரஜினிகாந்த் சாந்தமாக பதில் அளித்ததாக டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த் அந்த புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

Friday, 25 April 2014

மக்களவைத் தேர்தல்: தமிழக வாக்குப்பதிவு நிலவரம்

தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 72.8 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்தத் தகவலை, தமிழக தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார். தமிழகத்தில் வாக்குப்பதிவு அமைதியான முறையிலேயே நடந்து முடிந்தது. ஒரு சில இடங்களில் மட்டுமே வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. தருமபுரி தொகுதியில் அதிகபட்சமாக 80.99 வாக்குகள் பதிவானது. குறைந்தபட்சமாக தென் சென்னையில் 57.86% வாக்குகள் பதிவாகின. தமிழகத்தில் 72.8 சதவீத வாக்குகள் என்பது, கடந்த 1967-ம் ஆண்டுக்குப் பிறகு, தமிழகத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் பதிவான அதிகபட்ச வாக்குகள் ஆகும் என்பது கவனிக்கத்தக்கது. இறுதி நிலவரப்படி, தொகுதி வாரியான வாக்குப்பதிவு நிலவரம் வருமாறு: 

தொகுதி
காலை 9 மணி
காலை 11 மணி
மதியம் 1 மணி
மதியம் 3 மணி
மாலை 5 மணி
இறுதி நிலவரம்
திருவள்ளூர் (தனி)
10%
34.4%
44%
58%
70.4%
74.75%
வட சென்னை
12.62%
27.4%
41%
50.4%
60.29%
64.58%
தென் சென்னை
10%
26.3%
39.5%
49.3%
56.84%
59.86%
மத்திய சென்னை
11%
25.4%
35%
48.55%
59.42%
62.23%
ஸ்ரீபெரும்புதூர்
11%
30.6%
41%
53%
59.24%
61.19%
காஞ்சிபுரம் (தனி)
15%
36.4%
44%
59.3%
65.53%
64.08%
அரக்கோணம்
8%
37.8%
47%
64%
74.37%
77.02%
வேலூர்
16.05%
34.3%
51.5%
59.8%
70.3%
72.32%
கிருஷ்ணகிரி
8.67%
38.9%
45.4%
62%
74.35%
77.33%
தருமபுரி
9%
42.9%
51.4%
71.2%
79.32%
80.99%
திருவண்ணாமலை
15%
39.1%
52%
64%
74.03%
77.48%
ஆரணி
14.2%
41%
47%
63%
77.74%
78.66%
விழுப்புரம் (தனி)
9%
37.1%
43%
65.1%
74.69%
76.02%
கள்ளக்குறிச்சி
11%
38.7%
44.5%
66.9%
75.62%
77.23%
சேலம்
14.6%
34.92%
49.5%
62%
74.35%
77.29%
நாமக்கல்
14%
37.8%
51.83%
64%
76.29%
79.15%
ஈரோடு
18%
37.8%
54%
64.4%
73.54%
75.61%
திருப்பூர்
17.13%
35.8%
47.3%
64%
72.78%
71.26%
நீலகிரி (தனி)
11%
32.3%
46.45%
60.33%
69.77%
74.3%
கோயமுத்தூர்
15%
32.7%
39%
56.7%
66.15%
68.94%
பொள்ளாச்சி
16%
33.4%
42%
61%
71.06%
72.84%
திண்டுக்கல்
16%
39.8%
46.8%
64%
75.1%
78.29%
கரூர்
18.64%
39.6%
56.48%
69.4%
77.74%
79.88%
திருச்சி
16%
34.6%
46.25%
56.8%
67.63%
70.43%
பெரம்பலூர்
17.71%
39%
50.3%
66.6%
75.42%
80.12%
கடலூர்
17.4%
38%
52%
65.7%
76%
77.6%
சிதம்பரம் (தனி)
17.6%
37.6%
54.7%
67.2%
76.39%
79.85%
மயிலாடுதுறை
15.89%
34.5%
41%
55.8%
67.63%
75.4%
நாகப்பட்டினம் (தனி)
17.13%
37.3%
53%
62.4%
73.2%
76.69%
தஞ்சாவூர்
17.32%
39.5%
51%
63.2%
71.96%
75.02%
சிவகங்கை
16.09%
36.3%
49.71%
61.9%
69.82%
71.47%
மதுரை
15.94%
31%
49.33%
57%
62.65%
65.46%
தேனி
17.9%
36.9%
49.5%
62%
68.24%
72.56%
விருதுநகர்
16.66%
36.9%
58.47%
62.2%
70.39%
72.19%
ராமநாதபுரம்
15%
33.37%
51.75%
57.4%
65.8%
68.84%
தூத்துக்குடி
15.4%
33.28%
44.8%
57.6%
67.1%
69.12%
தென்காசி (தனி)
16.7%
35.68%
46.4%
61.8%
71.01%
74.3%
திருநெல்வேலி
14%
33.6%
48%
57%
66.33%
66.59%
கன்னியாகுமரி
15%
31
45%
55.6%
65.29%
65.15%
மொத்தம்
14.31%
35.28%
47.19%
60.52%
70.0%
72.8%
ஆலந்தூர் இடைத் தேர்தல்
11%
27.6%
40%
45.1%
62%
63.98%

Thursday, 24 April 2014

டைம் கருத்துக்கணிப்பு: மோடியை முந்திய கெஜ்ரிவால்

டைம் கருத்துக்கணிப்பு: மோடியை முந்திய கெஜ்ரிவால்




நியூயார்க்:உலகப் புகழ்பெற்ற அமெரிக்காவின் டைம் நாளிதழ் உலக அளவில் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவர்கள் பற்றிய கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. இக்கருத்துக்கணிப்பில் பாரதீய ஜனதாவின் பிரதம வேட்பாளர் நரேந்திர மோடியை பின்னுக்கு தள்ளிவிட்டு ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முந்திஇடம்பிடித்துள்ளார். 
டைம் பத்திரிக்கை உலகப் புகழ்பெற்றவர்கள் 100 பேர் பட்டியலில் அரவிந்த் கெஜ்ரிவால் இடம்பெறலாமா என்ற கேள்விக்கு 71.5 சதவீதம் பேர் ஆம் என்றும் 28.5 சதவீதம் பேர் இல்லை என்றும் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். அதேபோன்று மோடி பட்டியலில் இடம்பெறலாமா என்பதற்கு 49.7 சதவீதம் பேர் ஆம் என்றும் 50.5 சதவீதம் பேர் இல்லை என்றும் கூறியுள்ளனர்.
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவாக 16.52 சதவீதம் பேரும் இல்லை என்று 83.5 சதவீதம் பேரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பட்டியலில் அமெரிக்காவின் புகழ்பெற்ற பாடகி கேட் பெர்ரி முதலிடத்தில் உள்ளார்.



Monday, 14 April 2014

டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் கடல் பனிப்பாறையில் மோதல்

டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் கடல் பனிப்பாறையில் மோதிய நாள்: ஏப்ரல் 14, 1912
 
ஆர்எம்எஸ் டைட்டானிக் என்பது ஒரு ஆடம்பர பயணிகள் கப்பல் ஆகும். இது வடஅயர்லாந்தில் பெல்பாஸ்ட் நகரில் உருவானது. 1912 இல் முதன் முதலாகச் சேவைக்கு விடப்பட்டபோது இதுவே உலகின் மிகப்பெரிய பயணிகள் நீராவிக் கப்பலாகும். டைட்டானிக் தனது முதற் பயணத்தை இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் துறைமுகத்தில் இருந்து நியூயோர்க் நகரை நோக்கி புதன்கிழமை, ஏப்ரல் 10, 1912 இல் கப்டன் எட்வர்ட் சுமித் தலைமையில் தொடங்கியது.

புறப்படும் போது டைட்டானிக்கின் உந்திகளின் தாக்கம் அருகிலிருந்த நியூயோர்க் என்ற கப்பலை நகர்த்தி டைட்டானிக்குக்கு மிக அருகில் செல்ல வைத்தது. இதனால் அது ஒரு மணி நேரம் தாமதித்தே புறப்பட்டது. ஆங்கிலக் கால்வாயைத் தாண்டியதும் பிரான்சில் சேர்பூர்க்கில் நிறுத்தப்பட்டு கூடுதல் பயணிகள் ஏற்றப்பட்டனர். மீண்டும் அடுத்த நாள் அயர்லாந்து, குயீன்ஸ் டவுன் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டு நியூயார்க்கை நோக்கி 2,240 பயணிகளுடன் செல்லத் தொடங்கியது. டைட்டானிக் மூன்று வகுப்புக்களைக் கொண்டிருந்தது. மூன்றாவது கீழ் வகுப்பில் பொதுவாக அமெரிக்காவில் குடியேறுவதற்காக சென்றவர்களே அதிகமாக இருந்தனர். முதல் வகுப்பில் பல புகழ்பெற்ற கோடீஸ்வரர்கள் சென்றனர்.

ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 14 இல் கடலில் வெப்பநிலை குறைந்து கிட்டத்தட்ட உறைநிலையை அடைந்தது. கடல் மிகவும் அமைதியாக இருந்தது. 1:45 மணிக்கு அமெரிக்கா என்ற கப்பலில் இருந்து டைட்டானிக்குக்கு வழியில் பனிப்பாறைகள் உள்ளதாக செய்தி அனுப்பப்பட்டது. ஆனாலும் இச்செய்தி டைட்டானிக்கை அடையவில்லை.

இரவு 11:40 மணிக்கு பெரும் பனிப்பாறை ஒன்றுடன் டைட்டானிக் மோதியது. கப்பலை மோதாமல் திருப்பும் முயற்சி நிறைவேறவில்லை. கப்பல் முற்றாக நிறுத்தப்பட்டது. கப்பலில் மொத்தம் 20 உயிர் காப்பு படகுகள் இருந்தன. முதலாவது படகு காலை 12:40 க்கு இறக்கப்பட்டது. முதலாம் இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கு படகுகளில் ஏறுவது சுலபமாக இருந்தது. ஆனால் மூன்றாம் வகுப்புப் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

கப்பலில் இருந்து ஆபத்து சமிக்கைகள் பல திசைகளிலும் அனுப்பப்பட்டன. அண்மையில் இருந்த சில கப்பல்கள் செய்திகள் அனுப்பின. ஆனாலும் அவை எதுவும் டைட்டானிக்குக்கு அருகில் வருவதற்கு நேரம் போதவில்லை. சரியாக அதிகாலை 2:20 மணிக்கு கப்பல் முற்றாக மூழ்கியது. மொத்தம் இருந்த 2,223 பேரில், 706 பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டனர். 1,517 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் கடலில் குளிர் தாங்காமையினால் உயிரிழந்தனர்.

டைட்டானிக் கடலில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த 1503 பேர் கொல்லப்பட்ட நிகழ்வு அமைதிக் காலத்தில் நடந்த மிகப்பெரும் கடல் அழிவாகக் கருதப்பட்டது. டைட்டானிக் கப்பல் அக்காலத்தில் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு கட்டப்பட்டதாகவும் அது மூழ்கவே முடியாததெனவும் கருதப்பட்டது. இப்படியான ஒரு கப்பல் மூழ்கியது உலகெங்கும் பெரும் அதிர்ச்சியை உண்டு பண்ணியது.

கப்பலின் சேதமடைந்த பகுதிகளை செப்டம்பர் 1, 1985 இல் ரொபேர்ட் பலார்ட் தலைமையிலான ஆய்வாளர் குழு ஒன்று கண்டு பிடித்தது. டைடானிக் கப்பல் இப்போது கடல் மட்டத்திலிருந்து 12,000 அடி ஆழத்தில் இருக்கின்றது. 

மணிப்பூர்: 4,000 ஆயுதங்கள், 100+ பதுங்கு குழிகள், பற்றியெரியும் பகை; வடகிழக்கில் என்ன நடக்கிறது?

  பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 4ம் தேதி இரண்டு பெண்களை முழுவதும் ஆடை களைந்து தெருவில் அழைத்துச் சென்றனர், மானபங்கம் ச...