2014 ஆகஸ்ட் மாதத்திற்கு பின் இப்போது பெட்ரோல் விலை உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75.12. டீசல் 66.84. 2017 ஜூன் மாதம் பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தபின் பெட்ரோல் விலை 8 சதவீதமும், டீசல் விலை 12 சதவீதமும் உயர்ந்திருக்கிறது என்றால் மத்திய, மாநில அரசுகள் எந்த அளவுக்கு பெட்ரோலிய பொருட்கள் மீது வரியை சுமத்தி உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும். இதற்கும் 2014ல் பெட்ரோல் மற்றும் டீசலை பிரித்து எடுக்கும் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 109 டாலராக இருந்தது. அப்போதும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.75க்குள் இருந்தது. இப்போது அதே கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 70 டாலருக்குள் தான் உள்ளது. எப்படிப்பார்த்தாலும் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.50 முதல் 55க்குள் தான் இருக்க வேண்டும். ஆனால் விலை இந்த அளவுக்கு உயர காரணம் வரிகள். இது லாபத்திற்காகவும், அரசு வருமானத்திற்காகவும் மக்கள் மீது சுமத்தப்பட்ட சுமை. இந்த விலையில் லிட்டருக்கு ரூ.19 மத்திய அரசு வரியாக வசூலிக்கிறது. அதே போல் தமிழகத்தை பொறுத்தவரையில் ஒரு லிட்டர் விலையில்...