Fireflies is the new park in the city of central China's vuvohan. Park at night by the light of thousands of fireflies racikkalamintap Park is currently divided into 5 sections. Flying the area, listening area, away from the viewing area, the breeding area, categorized as scientific description area, except for the audience Audiences kavarntilukkiratuinta fireflies in the park, researchers largely converge. The price of Chinese buy Fireflies, Fireflies Park, which opened in May celkinranarkatanta to their homes to see the huge numbers of Chinese people have accumulated to date will remain open until the end varukinranarimmata fireflies in the park, children attraction dinosaur exhibition, various sports events are taking place
**************************************************************************************
மத்திய சீனாவின் வுவோஹான் நகரில் புதிதாக மின்மினி பூங்கா அமைந்துள்ளது. இப்பூங்காவில் இரவு நேரங்களில் ஆயிரக்கணக்கான மின்மினி பூச்சிகளின் ஒளியைக் கண்டு ரசிக்கலாம்.இந்தப் பூங்கா தற்போது 5 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது. அவை பறக்கும் பகுதி, கவனிக்கும் பகுதி, தொலைவில் இருந்து பார்க்கும் பகுதி, இனப்பெருக்கப் பகுதி, அறிவியல் விளக்கப் பகுதி என்று பிரிக்கப்பட்டு, பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கிறது.இந்த மின்மினி பூங்காவில் பார்வையாளர்களைத் தவிர, ஆராய்ச்சியாளர்களும் பெருமளவில் குவிகின்றனர். இங்கிருக்கும் மின்மினி பூச்சிகளை சீனர்கள் விலைக்கு வாங்கிக்கொண்டு, தங்கள் வீடுகளுக்கு கொண்டு செல்கின்றனர்.கடந்த மே மாதம் திறக்கப்பட்ட மின்மினி பூங்காவைப் பார்ப்பதற்காக ஏராளமான சீன மக்கள் இன்றுவரை குவிந்து வருகின்றனர்.இம்மாத இறுதி வரை திறந்திருக்கும் மின்மினி பூங்காவில், குழந்தைகளை கவருவதற்காக டைனோசர் கண்காட்சி, பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன