கேன்பெரா: கடுமையான காட்டுத் தீ மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய அரசு பத்தாயிரம் ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் கடந்த சில மாதங்களாக கடுமையான வெப்பம் சுட்டெரித்து வருகிறது. இதனால் அங்கு கடுமையான வறட்சியும் ஏற்பட்டுள்ளது. வெப்பத்தால் ஆஸ்திரேலிய வனப் பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. மாதக்கணக்காக அவற்றை கட்டுப்படுத்த தீயணைப்புப் படையினரும் மீட்பு படையினரும் போராடி வருகின்றனர். தீக்கிரையாகும் விலங்குகள் ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தீயை அணைக்கும் பணியில் உள்ளூர் மக்களும் ஈடுபட்டுள்ளனர். இந்த காட்டுத் தீயில் இதுவரை 48 கோடிக்கும் அதிகமான வன விலங்குகள் கருகி உயிரிழந்துள்ளன. 20க்கும் மேற்பட்ட மனிதர்கள் உயிரிழந்துள்ளனர். பல லட்சம் ஏக்கர் பரப்பளவு உள்ள வனப்பகுதி எரிந்து நாசமாகியிருக்கிறது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி நெஞ்சை பதை பதைக்க வைத்தது. இந்நிலையில் ஏபிஒய் பகுதியில் உள்ள ஒட்டங்கள் உள்ளிட்ட விலங்குகள் அதிகளவு நீரை குடித்து வருகின்றன. இதனால் அப்பகுதியில் உள்ள மக்களின் தேவைக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்...