சென்னை, மே. 1 சென்னை நகருக்கு தீவிர வாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத் துறையினர் கடந்த சில ஆண்டுகளாக எச்சரித்து வந்தனர். இதையடுத்து தமிழக போலீசாரின் நடவடிக்கைகளால் தீவிரவாதிகள் கைவரிசை காட்ட முடியாமல் இருந்தது. இந்த நிலையில் பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர் – இ– தொய்பா தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் தற்கொலை படையினரை இலங்கை வழியாக தமிழ்நாட்டுக்குள் ஊடுருவ வைக்க திட்டமிட்டு முயற்சிகளில் ஈடுபட்டனர். இதை கண்டுபிடித்த உளவுத்துறை தமிழக போலீசாரை உஷார்படுத்தினார்கள். அதன்பேரில் நடந்த சோதனையில் நேற்று முன் தினம் இரவு திருவல்லிக் கேணியில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவாளி முகம்மது ஜாகீர்உசேன் என்பவன் பிடிபட்டான். அவன் சென்னையில் பல இடங்களில் தொடர் குண்டு வெடிப்புக்கு சதி திட்டம் தீட்டியது தெரிய வந்தது. இதனால் சென்னையில் நேற்று முதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. தீவிரவாதிகள் சென்னையில் ஊடுருவ தொடங்கி இருக்கும் தகவலால் ஏற்பட்ட அந்த அதிர்ச...