ஐதராபாத்: ஐதராபாத்தில் குண்டுவெடிப்பு தாக்குதலில் சந்தேகத்துக்கு இடமான ஒருவரின் உருவம் 2 ரகசிய கேமராக்களில் பதிவாகி இருப்பதாக ஆந்திர டிஜிபி தினேஷ் ரெட்டி தெரிவித்துள்ளார். ஆந்திர தலைநகர் ஐதராபாத்தின் தில்சுக் நகரில் கடந்த மாதம் 21ம் தேதி 2 இடங்களில் அடுத்தடுத்து பயங்கர குண்டுகள் வெடித்து சிதறின. முதல் குண்டு கோனார்க் தியேட்டர் அருகிலும் 2வது குண்டு வெங்கடாத்ரி தியேட்டர் அருகிலும் வெடித்தது. சைக்கிளில் இந்த குண்டுகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த குண்டு வெடிப்பில் 17 பேர் பலியானார்கள். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் சதி இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கிடையில் இந்த வழக்கு விசாரணை ஆந்திர போலீசிடம் இருந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டுள்ளது. டெல்லி சிறையில் உள்ள இந்திய முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் 2 பேரிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். குண்டுவெடிப்பு நடந்த இடத்துக்கு அவர்களை கொண்டு வந்து விசாரித்தன...