பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 4ம் தேதி இரண்டு பெண்களை முழுவதும் ஆடை களைந்து தெருவில் அழைத்துச் சென்றனர், மானபங்கம் செய்தனர், வல்லுறவு செய்தனர். 77 நாள்களுக்குப் பிறகு இது தொடர்பான வீடியோ வெளியாகி நாட்டின், உலகின் மனசாட்சியை உலுக்குகிறது. மணிப்பூர் சம்பவம் பற்றி பரவலாகத் தெரிவது இதுதான். ஆனால், அங்கு நடந்தது இது மட்டுமே அல்ல. அன்று ஒரு நாள் அங்கு நடந்த சம்பவங்களை முழுமையாகத் தெரிந்துகொண்டால் உங்களுக்குக் குலை நடுங்கும். மூன்று மாதங்களாக நடந்துகொண்டிருக்கும் இனவாத வன்முறையைப் பற்றி முழுதாகப் புரிந்துகொண்டால், இந்தியா எதிர்கொண்டிருக்கும் ஆபத்தின் ஆழம் புரியும். 'மூன்று மாதங்களாக அந்த சின்னஞ்சிறு மாநிலத்தில் நடக்கும் இனவாத வன்முறை அரசாங்கத்தின் சக்தியை மீறி நடக்கிறதா, அல்லது அரசாங்கத்தின் ஆசியோடு நடக்கிறதா' என்பதுதான் வலுவாக எல்லோரும் எழுப்பும் கேள்வி. இந்தக் கேள்வியைப் பிறகு ஆராய்வோம். மே 4ம் தேதி மணிப்பூரில் நடந்தது என்ன? அதிர வைக்கும் தகவல்கள் அங்கே நடப்பது இனவாத வன்முறை என்றால், யாருக்கும் யாருக்கும் சண்டை? ஆதிக்கம் மிருந்த பெரும்பான்மை இனம...