மத்திய அரசு சார்பில் 2020ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த நவம்பர் 8ஆம் தேதி நடைபெற்றது. இதில் 73 பேருக்கு விருதுகளை வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கவுரவித்தார். இவர்களில் செருப்பு கூட அணியாமல் வெறும் கால்களால் நடந்து வந்து, மிகவும் எளிய உடையில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் துளசி கவுடா . விருது பெறுவதற்கு முன்பு பிரதமர் மோடிக்கு இவர் வணக்கம் சொன்ன புகைப்படம் இணையத்தில் பெரிதும் வைரலாகி வருகிறது. இதையடுத்து துளசி கவுடாவின் கரங்களை பிடித்துக் கொண்டு பிரதமர் மோடி நெகிழ்ச்சியோடு பாராட்டு தெரிவித்தார். இதேபோல் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றை பெறும் போது கூட, தனக்கே உரிய எளிமையான முறையில் வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் துளசி கவுடா. இவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டதை பல்வேறு சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கொண்டாடி வருகின்றனர். இவர் பற்றிய தகவல்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வாழ்த்து மழையில் ...