Skip to main content

Posts

Showing posts from April, 2020

ரகசிய சிகிச்சையில் வட கொரிய அதிபர் கிம்

சியோல்: வட கொரியாவின் அதிபர் கிம் ஜங் உன்னுக்கு, அந்நாட்டு தலைநகர் பியாங்யாக்கில் உள்ள சிறப்பு மருத்துவமனையில் ரகசியமாக சிகிச்சை அளிக்கப்படுவதாக, தென் கொரிய பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கிழக்காசிய நாடான வட கொரியாவின் அதிபர் கிம் ஜங் உன், இருதய நோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக, சமீபத்தில் தகவல் வெளியானது வட கொரிய அதிபர் கிம் ஜாங் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் அது குறித்து  அமெரிக்க அதிபர் ட்ரம்ப்  தகவல் வெளியி்ட்டுள்ளார் வட கொரியா அதிபர் கிம் ஜாங் சமீபகாலமாக வெளிஉலகிற்கு வரவில்லை. வடகொரியாவின் தந்தை எனப்படும் கிம் இல் சங்-ன் பிறந்த தின கொண்டாட்டத்தில் அதிபர் கிம் ஜாங் உன் பங்கேற்கவில்லை. கடந்த 15-ம் தேதி நடைபெற்ற தனது தாத்தாவின் பிறந்தநாள் விழாவில் அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொள்ளாதது சந்தேகங்களை எழுப்பியது. கடந்த 2011-ம்ஆண்டு அதிபராக வந்தபின் முதல்முறையாக இந்த நிகழ்ச்சியை கிம் தவிர்த்துள்ளா். சமீபத்தில் அவருக்கு நடந்த இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சி.என்.என் செய்தி வெளியிட்டு...