ம றைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா எப்போதுமே, சுற்றுலா என்பது ஒரு நாட்டின் பொருளாதார வளத்தை மேம்படுத்தும் உந்துசக்தி என்று குறிப்பிடுவார். பிரதமர் நரேந்திரமோடி, காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 2 தலைநகரங்களான காஷ்மீரையும், ஸ்ரீநகரையும் இணைக்கும் வகையில் 9.2 கிலோமீட்டர் தூரத்திற்கு, ரூ.2,500 கோடி செலவிலான நாட்டிலேயே மிகப்பெரிய சுரங்கப்பாதையை நேற்று முன்தினம் திறந்துவைத்தார். அப்போது அவர், கடந்த 40 ஆண்டுகளில் சுற்றுலா இந்தப்பகுதியில் மேம்பாடு அடைந்திருந்தால், உலகமே காஷ்மீரின் காலடியில் இருந்திருக்கும். காஷ்மீர் இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க சுற்றுலாவா?, பயங்கரவாதமா? என்பதை முடிவு செய்யவேண்டும். சுற்றுலா வளர, வளர பொருளாதாரம் வளர்ந்துகொண்டேபோகும். அந்தமாநில மக்களும் அதனால் பயனடைந்து கொண்டே இருப்பார்கள் என்று தெரிவித்திருக்கிறார். பிரதமர் இந்த கருத்துகளை தெரிவித்த அதேநாளில், சென்னை அருகிலுள்ள மாமல்லபுரத்தில் வெட்கி தலைகுனிய வைக்கும் ஒருசம்பவம் நடந்திருக்கிறது. மாமல்லபுரத்திற்கு ஜெர்மன் நாட்டிலிருந்து 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சுற்றுலா வந்திருக்கிறார்கள். அதில் 5 பேர் ...