பெர்முடா முக்கோணத்தை பற்றிய அதிர்ச்சியான தகவல்கள் வட அட்லாண்டிக் கடலின் மேல்பகுதியில் தான் பெர்முடா முக்கோணம் இருக்கின்றது. இதை சாத்தானின் முக்கோணம் என்றும் அமெரிக்க மக்கள் குறிப்பிடுகின்றனர். இதற்கு காரணம், பெர்முடா முக்கோணத்தின் மேல் கடந்த விமானங்களும், அருகே சென்ற கப்பல்களும், படகுகளும் என்ன ஆனது என்றே தெரியாத அளவில் அழிந்துப் போயிருக்கின்றன. அறிவியலில் உச்சத்தை அடைந்துவிட்டோம், செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதற்கான கூறுகளை கண்டறிந்துள்ளோம் என்று மார்தட்டிக் கொள்ளும் அறிஞர்கள் கூட பெர்முடா முக்கோணத்தில் நடக்கும் இந்த வினோத செயல்களை கண்டறிய முடியாமல் தவிக்கின்றனர். அப்படி என்ன தான் நடக்கிறது என்று ஆராய்ச்சி கூட செய்ய இயலாத அளவு மிகவும் ஆபத்தானப் பகுதி என்று தடைவிதிக்கப்பட்டு திகழ்கிறது பெர்முடா முக்கோணம். அங்கு நடக்கும் அதிர்ச்சியான தகவல்கள் பற்றி இனிப் பார்க்கலாம்… திசைக் குழப்பம் கப்பல் மற்றும் விமானங்கள் காந்த திசைக் காட்டியின் படிதான் பயணிக்கின்றன. ஆனால், பெர்முடா முக்கோணத்தை கடக்கும் போது காந்த திசைக் காட்டிகள் செயலிழந்துப் போவதாகக் க...