பழிக்குப் பழியாக நடக்கும் கொலை சம்பவங்கள் எப்போதும் முடிவுக்கு வருவதில்லை. தொடர்கதை போல் மாறி மாறி இரு தரப்பிலும் ஆட்கள் பலியாகிக் கொண்டே இருப்பார்கள். இதனால் எத்தனையோ குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ளன. இருந்தாலும் தூக்கிய அரிவாளை கீழே வைக்க மாட்டார்கள். அதிலும் தென் மாநிலங்களில் இதுபோன்ற பழிக்குப் பழி கொலைகள் அதிகமாகவே நடக்கின்றன. நெல்லையில் ஒரே நாளில் 2 கொலைகள் விழுந்துள்ளன. நெல்லை தாழையூத்து அருகேயுள்ள மேலபால மடையை சேர்ந்தவர் விஜயராஜ். கட்டிட தொழிலாளி. 10 நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. ஒரு வீட்டில் கட்டுமான பணி செய்து கொண்டிருந்தபோது 4 பைக்கில் வந்த 8 பேர் கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது. இதில் படுகாயமடைந்த அவர் இறந்தார். ஆத்திரமடைந்த உறவினர்கள் கொலையாளிகள் தரப்பை சேர்ந்த 2 வீடுகள், கடைகளை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். அப்போது தெருவில் வந்து கொண்டிருந்த டீக்கடை உரிமையாளர் மணி என்பவரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தனர். அங்கு பதற்றம் நீடிப்பதால் ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விஜயராஜ் மற்றும் அவரது ...