Skip to main content

Posts

வேட்டி அணியாத பக்தர்கள் வெளியேற்றம்: திருப்பதியில் அதிரடி

  திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இதுவரை ஆர்ஜித சேவைகளான சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை, கல்யாண உற்சவம், வசந்த உற்சவம் என  அனைத்து ஆர்ஜித சேவைகளுக்கும் இந்துக்களின் சம்பிரதாய உடைகளான வேட்டி, சட்டையை ஆண்களும், பெண்கள் சேலை அணிந்து வரவேண்டும் என  கட்டாயமாக இருந்து வருகிறது. கடந்த மாதம் 27ம் தேதி முதல் ரூ.300க்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் இ-தரிசன கவுன்டர்கள்  மூலமாகவும், இணைய தளம் மூலமாகவும் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த டிக்கெட் பெற்று தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கட்டாயமாக சம்பிரதாய உடை  அணிந்து வர வேண்டும் என தேவஸ்தானம் அறிவித்தது.இதேபோல் 60 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்யக்கூடிய ரூ.50 சுதர்சன டிக்கெட் பெற்றுவரும்  பக்தர்களும் சம்பிரதாய உடை அணிந்து வர வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆன்லைனில் டிக்கெட் பெற்று வந்த பக்தர்கள் தரிசனத்துக்கு காத்திருந்த வரிசையில், இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு நேற்று திடீர் ஆய்வு  செய்தார். இதில் 40 சதவீதம் பக்தர்கள் சம்பிரதாய உடை அணியாமல் பேன்ட், சட்...