Skip to main content

Posts

                                              ஜோகன்னஸ்பர்க்: பூமியில் மோத வரும் மிகப்பெரும் விண்கலத்தால், மிகப்பெரிய தாக்கம் பூமியில் எற்படும் என்று புதிய ஆய்வு ஒன்றில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.       தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இணையதளம் ஒன்று, பி 612 அறக்கட்டளை ஒன்று செயத ஆய்வை வெளியிட்டுள்ளது.  இதில் ஒவ்வொரு 100 ஆண்டுகளுக்கு முறையும் மிகபெரிய விண்கல் ஒன்று பூமியை தாக்க வருகிறது என்றும், இந்த முறை பூமியை தாக்கும் விண்கல் ஹிரோஷிமா அணுகுண்டுகளை விட ஆபத்தான விளைவுகளை கொண்டு வரும் என்று நிருபிக்க்கப்பட்டுள்ளதாகவும் இந்த ஒரு விண்கல் 40 ஹிரோஷிமா அணுகுண்டுகளுக்கு சம்மானது என்றும் தெரிவித்துள்ளது.

மருத்துவ ஆய்வில் மகத்தான சாதனை: மனித தோலில் இருந்து குருத்தணுக்கள் உருவாக்கும் முயற்சி வெற்றி

                                லண்டன்: மனித தோலில் உள்ள அணுக்களில் இருந்து குருத்தணுக்களை (ஸ்டெம் ஸெல்) உருவாக்கும் நெடுநாள் ஆராய்ச்சியில் அமெரிக்க- ஜப்பானிய மருத்துவ ஆராய்ச்சி குழுவினர் வெற்றியடைந்துள்ளனர். பிறந்த குழந்தையின் வயிற்றில் இருக்கும் தொப்புள் கொடியில் தாயின் கருப்பயில் வளர்ந்த ஏராளமான குருத்தணுக்கள் தேங்கியுள்ளன. எனவே, இவற்றை சேமித்து வைப்பதன் மூலம் பின்நாட்களில் அந்த குழந்தை முதுமை அடையும்போது ஏற்படும் கொடிய நோயின் தாக்கத்தை எதிர்த்து போராட இந்த குருத்தணுக்களை பயன்படுத்த முடியும் என மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இதையும் கடந்து, செயற்கை முறையில் குருத்தணுக்களை உருவாக்கும் ஆராய்ச்சியில் மாசாச்சூசெட்ஸ் மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னேறிய குருத்தணு ஆராய்ச்சி கூடத்தில் பணியாற்றும் அமெரிக்கா மற்றும் ஜப்பானை சேர்ந்த டாக்டர்கள் கூட்டாக ஈடுபட்டிருந்தனர். இதற்காக பரிசோதனை கூடத்தில் வளர்க்கப்படும் எலிகளின் மேல்தோலில் உள்ள உயிரணுக்களை எடுத்து வீரியம் குறைந்த சிட்ரிக் அமிலக் கலவையில்...

நியூசிலாந்து கடற்பகுதியில் பிடிபட்ட அபூர்வ வகை ‘கண்ணாடி மீன்’

வெலிங்டன்,  உலகில் மிக அபூர்வமாக தென்படும் அரியவகை ‘கண்ணாடி மீன்’ நியூசிலாந்தை சேர்ந்த ஒரு மீனவரின் வலையில் சிக்கியுள்ளது. நியூசிலாந்தின் வடபகுதியில் உள்ள கரிகரி வளைகுடா பகுதியில் அந்நாட்டை சேர்ந்த ஃப்ரேஸர் என்பவர் தனது மகன்களுடன் மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது கடல் நீரின் மேற்பரப்பில் கண்ணாடி போன்ற பளபளப்பான ஏதோ ஒரு அழகிய பொருள் நெளிந்து, நெளிந்து செல்வதை கண்டு வியப்படைந்த அவர், தனது கைவலையை லாவகமாக வீசி அந்த அபூர்வ மீனை சிறைபிடித்தார். அதனை சோதனையிட்ட கடல் உயிரியல் ஆய்வக அதிகாரிகள் பிடிபட்ட இந்த அரியவகை மீன், 'ஸல்பா மகியோர்’ என்ற இறால் வகை மீன் இனத்தை சேர்ந்தது என்றும், மிக அபூர்வமாகவே இவை கடலின் மேற்பரப்பில் தென்படும் என்றும் கூறியுள்ளனர். 'முழுக்க முழுக்க கண்ணாடி போன்ற வடிவில் உள்ள இந்த மீனின் உடல் வழியாக ஊடுருவி, எதிர்புறத்தில் உள்ள பொருட்களை துல்லியமாக பார்க்க முடிகிறது. முதுகெலும்பு இல்லாத இந்த மீனின் இரைப்பை பகுதியில் உள்ள ஆரஞ்சு நிற அழுக்கு மட்டும் 'பளிச்’ என்று வெளியே தெரிகிறது’ என்று இந்த மீனை பிடித்தவரின் மகன்களில் ஒருவனான ஃபின் என்ற சிறுவன் ஆச்சரிய...

ரத்தத்தில் சர்க்கரையை கட்டுபடுத்தும் கொய்யா

கொய்யாக்கனியின் சுவையை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கொய்யா வீட்டுத் தோட்டங்களிலும், வயல் வரப்புகளிலும் வளர்க்கப்படும்  மரவகையாகும். இது இந்தியா, இலங்கை, மியான்மர் நாடுகளில் அதிகம் வளர்க்கப்படுகிறது. இதற்கு ஜாம்பலா, கோவா, பலாம்பர் என்ற பெயர்களும்  உண்டு. கொய்யா முக்கனியான மா, பலா, வாழை இவற்றிக்கு இணையாக வர்ணிக்கப்படும் பழமாகும். மிகக் குறைந்த விலையில் அதிக சத்துக்களைத்  தன்னகத்தே கொண்ட பழம் இது.   கொய்யா கோடைக்காலங்களில் தான் அபரிமிதமாக விளையும். தற்போது உயிரி தொழில் நுட்ப முறையில் வருடம் முழுவதும் உற்பத்தி செய்யப்பட்டு  விற்பனைக்கு வருகிறது.கொய்யாவில் பலவகைகள் உள்ளன. தற்போது விற்பனைக்கு வரும் பழங்களில் உள் சதைப்பகுதி வெள்ளை மற்றும் சிவப்பு  நிறங்களில் உள்ளன. ஒரு சில வகை கொய்யாவின் சதைப்பகுதி ரோஸ் நிறத்தில் காணப்படும். இவை அனைத்தின் மருத்துவப் பயனும் ஒன்றுதான்.  கொய்யாக்கனியின் சுவையைப் போல் அதன் மணமும் ரம்மியமாக இருக்கும். இதில் அதிகளவு வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.  குறிப்பாக நெல்லிக்கனிக்கு அடுத்த நிலையில் வைட்...

பிச்சைக்காரன் என்று நினைத்து ரஜினிகாந்துக்கு 10 ரூபாய் தர்மம் செய்த பெண்

சென்னி, டிச.15  ரஜினிகாந்தின் பிறந்த நாளையொட்டி அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களை தொகுத்து பிரபல கண் டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த் ஓர் புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அந்த புத்தகத்தில் ரஜினிகாந்த சந்தித்த ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தை அவர் பதிவு செய்துள்ளார்.    பெங்களூரில் உள்ள பிரசித்தி பெற்ற கோயிலுக்கு குஜராத்தை சேர்ந்த ஒரு பெண்மணி தரிசனத்துக்காக வந்திருந்தார். கோயில் தூணின் ஓரமாக சாய்ந்து அமர்ந்திருந்த ஒருவரின் தோற்றத்தை கண்டு இரக்கப்பட்ட அந்த பெண் தனது கைப்பையில் இருந்து 10 ரூபாயை எடுத்து அவருக்கு தர்மமாக போட்டார். எப்போதும் போல் எளிமையான உடையில் தரிசனத்துக்காக வந்து தூணின் மேல் சாய்ந்து அமர்ந்திருந்த ரஜினிகாந்துக்கு அந்த பெண்ணின் செயல் அதிர்ச்சியை அளித்தது. இருப்பினும், அதை வெளிப்படுத்திக்கொள்ளாத ரஜினிகாந்த் அந்த 10 ரூபாயை வாங்கிக்கொண்டு அமைதியாக கோயிலுக்குள் சென்றார். சிறுது நேரம் கழித்து தரிசனம் முடிந்ததும் தனது காரை நோக்கி தனக்கே உரித்தான மிடுக்கான நடையில் அவர் சென்றபோது அவரை அடையாளம் கண்டுகொண்ட அந்த பெண் நடந்த தவறுக்காக ரஜினிகாந்திடம் வருத்த...

மக்களவைத் தேர்தல்: தமிழக வாக்குப்பதிவு நிலவரம்

தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 72.8 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்தத் தகவலை, தமிழக தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார். தமிழகத்தில் வாக்குப்பதிவு அமைதியான முறையிலேயே நடந்து முடிந்தது. ஒரு சில இடங்களில் மட்டுமே வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. தருமபுரி தொகுதியில் அதிகபட்சமாக 80.99 வாக்குகள் பதிவானது. குறைந்தபட்சமாக தென் சென்னையில் 57.86% வாக்குகள் பதிவாகின. தமிழகத்தில் 72.8 சதவீத வாக்குகள் என்பது, கடந்த 1967-ம் ஆண்டுக்குப் பிறகு, தமிழகத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் பதிவான அதிகபட்ச வாக்குகள் ஆகும் என்பது கவனிக்கத்தக்கது. இறுதி நிலவரப்படி, தொகுதி வாரியான வாக்குப்பதிவு நிலவரம் வருமாறு:  தொகுதி காலை 9 மணி காலை 11 மணி மதியம் 1 மணி மதியம் 3 மணி மாலை 5 மணி இறுதி நிலவரம் திருவள்ளூர் (தனி) 10% 34.4% 44% 58% 70.4% 74.75% வட சென்னை 12.62% 27.4% 41% 50.4% 60.29% 64.58% தென் சென்னை 10% 26.3% 39.5% 49.3% 56.84% 59.86% மத்திய சென்னை 11% 25.4% 35% 48.55% 59.42% 62.23% ஸ்ரீபெ...

டைம் கருத்துக்கணிப்பு: மோடியை முந்திய கெஜ்ரிவால்

நியூயார்க் : உலகப் புகழ்பெற்ற அமெரிக்காவின் டைம் நாளிதழ் உலக அளவில் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவர்கள் பற்றிய கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. இக்கருத்துக்கணிப்பில் பாரதீய ஜனதாவின் பிரதம வேட்பாளர் நரேந்திர மோடியை பின்னுக்கு தள்ளிவிட்டு ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முந்திஇடம்பிடித்துள்ளார்.  டைம் பத்திரிக்கை உலகப் புகழ்பெற்றவர்கள் 100 பேர் பட்டியலில் அரவிந்த் கெஜ்ரிவால் இடம்பெறலாமா என்ற கேள்விக்கு 71.5 சதவீதம் பேர் ஆம் என்றும் 28.5 சதவீதம் பேர் இல்லை என்றும் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். அதேபோன்று மோடி பட்டியலில் இடம்பெறலாமா என்பதற்கு 49.7 சதவீதம் பேர் ஆம் என்றும் 50.5 சதவீதம் பேர் இல்லை என்றும் கூறியுள்ளனர். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவாக 16.52 சதவீதம் பேரும் இல்லை என்று 83.5 சதவீதம் பேரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பட்டியலில் அமெரிக்காவின் புகழ்பெற்ற பாடகி கேட் பெர்ரி முதலிடத்தில் உள்ளார் .