திருவனந்தபுரத்தில் உள்ள சிபிஎம் மாவட்ட செயலாளர் அனவூர் நாகப்பன், ஆர்யா மேயராக பதவியேற்க இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 21 வயதான ஆர்யா ராஜேந்திரன் திருவனந்தபுரத்தின் மேயராக பதவியேற்க போகிறார் என்பதும், இத்தனை இள வயதில் மேயராகும் முதல் நபர் என்பதும் பலரையும் புருவம் உயர்த்தவைத்தது. தகவல் தெரிந்ததும், உள்ளாட்சி தேர்தலில் அவர் வென்ற தொகுதியான முடவன்முகலில் அவரை வரவேற்க தெருக்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குவிந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதே தொகுதியைச் சேர்ந்தவரான நடிகர் மோகன்லால் ஆர்யாவை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார். ”ஆர்யாவின் பெற்றோர் நீண்ட காலமாக கட்சியில் இருக்கிறார்கள். அவரது அப்பா ஒரு எலக்ட்ரீசியன். அம்மா எல்.ஐ.சி முகவராக இருக்கிறார்” எனக் கூறுகிறார் சி.பி.எம்மைச் சேர்ந்த கட்சித் தொண்டர் ஒருவர். ”சிறுவயதிலிருந்தே அப்பாவுடன் கைகோர்த்து கட்சி நிகழ்ச்சிகளுக்கு சென்றேன் என எல்லாரும் கூறுவார்கள். ஆனால் நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது பாலசங்கத்தில் சேர்ந்தது முதலாக கட்சி நினைவுகள் ஞாபகமிருக்கிறது” என்று கூறுகிறார் ஆர்யா.பால சங்கத்தில் துடி...