சென்னையிலுள்ள ஐடி நிறுவனங்கள் தண்ணீர் இல்லாததால் அதன் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யும் படி அறிவுறுத்தியுள்ளனர். சென்னையில் கடந்த இரு மாதங்கள் தண்ணீர் பஞ்சம் அதிகமாக காணப்படுகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இல்லாததும் பருவமழை பொய்த்து போனதாலும் சென்னையில் தண்ணீர் தட்டுபாடு அதிகரித்துள்ளது. மேலும் நிலத்தடி நீரும் குறைந்து போனதால் பொது மக்கள் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையின் ஒ.எம்.ஆர் ஐடி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யும்படி அறிவுறுத்தியுள்ளது. சென்னையின் பழைய மகாபலிபுரம் சாலையில் சுமார் 600 ஐடி நிறுவனங்கள் அமைந்திருக்கின்றன. இந்த நிறுவனங்களில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனால் இந்த நிறுவனங்கள் தண்ணீர் தேவையை சமாளிக்க பல முயற்சிகளை எடுத்துவருகிறது. இதனால் ஒஎம்ஆர் பகுதிக்கு தினசரி 3 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இவை பெரும்பாலும் மெட்ரோ லாரிகள் மூலம் தான் நிரப்படுகிறது. இவற்றில் 60 சதவீதம் தண்ணீரை ஐடி நிறுவனங்கள் தான் பயன்படுத்துகின்றன. சிப்காட் பகுதியில் உள்ள 46 ஐடி நிறுவனங்களுக்கு ம...