Skip to main content

Posts

Showing posts from December, 2018

நிலத்தடி நீருக்கு கட்டணம் ?

தற்போது நிலத்தடி நீருக்கு கட்டணம் வசூலிக்க நடுவண் அரசு முடிவெடுத்துள்ளது. இது பெரும் மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை நடுவண் நீர்வளத்துறை அமைச்சகம் நீர்வளத்தை பாதுக்காக்க செய்துள்ளதாக கூறுகிறது. இதை முந்தைய congress அரசு முடிவெடுத்தது அதை அப்போதைய எதிர் கட்சி மற்றும் மக்கள் யாரும் யேற்று கொள்ளவில்லை. இதை PJP நடைமுறை படுத்த உள்ளது. இதனால் ஏற்படும் விளைவுகள் : இவரு அரசு முடிவெடுப்பதில் மக்களிடையே மதிப்பை இளக்கும். ஏழை எளிய மக்களை பெரியத்தக்க பாதிக்கும். அரசு இதனால் வரும் நிதியை நீர் வளத்தை மேம்படுத்த உள்ளத்தக்க கூறுகிறது. ஆனால் இதை தனியாரிடம் கொடுத்துள்ளது . அனால் தனியார் அவர்கள் சரியாய்  செய்ய மாட்டார்கள் ஏன் என்றல் அவர் விருப்பதிக்கேற்ப விலை நிர்ணயம் செய்வார்கள் 2 லிருந்து 200 கூட ஏற்றுவார்கள் . தீர்வுகள்: அரசு இவ்வாறு செய்யாமல் இதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யலாம்.நிலத்தடி நீரை மேம்படுத்த ஆறு, குளம், குளத்தை போன்றவற்றை தூர் வார்த்தல், வெள்ளக்காலங்களில் தண்ணிரை சேமிக்க மக்களுக்கு அறிவுரை கூறுதல் வேண்டும், இல்லதென்றால் சட்டமாக பிறப்பிக்கலாம். இவரு செய்வதால் மக்களை ப...

பாரம்பரிய விவசாயத்தை மீட்ட நெல் ஜெயராமன் மரணம்

நெல் ஜெயராமன், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அதிகாலை மரணம் அடைந்தார். தீவிர சிகிச்சை அளித்தும் மருத்துவர்களால் அவரை காப்பாற்ற முடியவில்லை. நெல் ஜெயராமன், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தை சேர்ந்தவர். அழிவின் விழிம்புக்கு சென்ற பாரம்பரிய நெல் விதைகளை பாதுகாத்து மீட்ட பெருமைக்குரியவர்! இதற்காகவே ஆண்டு தோறும் நெல் திருவிழா நடத்தி, 169 ரகங்களை சேர்ந்த பாரம்பரிய நெல் விதைகளை இவர் மீட்டார். சாதாரண கூலித் தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கி, பாரம்பரிய விவசாயத்தை பாதுகாப்பதில் சாதனை படைத்தவர் இவர். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் சிஷ்யர்களில் ஒருவர்! தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவரான நெல் ஜெயராமன் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து சென்னை தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை 5.10 மணிக்கு காலமானார். நெல் ஜெயராமன் சிகிச்சைக்கு பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், விவசாயிகள், திரைப்பட கலைஞர்கள் நிதியுதவி செய்தனர். மு...