தமிழ் மொழி தொன்மையானது. முதற் சங்க காலமாக கூறப்படும் கி.மு 9600 முன்பிருந்து தமிழ் மொழி வழக்கிலிருந்ததா என்பது இதுவரை கண்டறியப்படாத போதிலும், குறைந்தபட்சம் 2500 ஆண்டுகள் தொன்மையுடையது தமிழ் மொழி. மதுரை அருகே கீழடியில் கிடைத்த நாணயங்கள், பழனி அருகே பொருந்தலில் கிடைத்த தாழிகள் இதை உறுதி செய்கின்றன. ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட ஈமத்தாழிகளில் இருக்கும் எழுத்துக்கள் தமிழ்-பிராமி என்று உறுதி செய்யப்பட்டாலே, தமிழ் மொழி 3800 ஆண்டுகள். தொன்மையானதாகிவிடும். குமரிக்கண்டம் மட்டும் நிரூபிக்கப்பட்டால், முதற்சங்க காலத்தையும் எட்டிவிடும் தமிழ் மொழி. இந்திய நாட்டில் வழக்கிலிருக்கும் மொழிகளில் தமிழ் மொழியே தொன்மையானது. தமிழில் பிறமொழி கலப்பின்று, ஆதி நாகரீகங்கள் பற்றியும் உரையாடலாம், நாளைய அறிவியலும் பேசலாம். நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய் வளரும் போதிலும், தன் வேர்களை மறவாத மரமாய் வாழும் உன்னத மொழி தமிழ். ஆனால், இந்தத் தமிழ் மொழி மீது காதலும் பற்றும் கொண்டால், இன்றைய இந்தியா அவனுக்களிக்கும் பெயர் இனவெறியன். தமிழ் தேசியம் பேசுபவனை பிரிவினைவாதி என்றும், தமிழர் உ...