Mannippu - indeed a Tamil word… Mannuthal (adj) - to think ; to consider. Mannal / Mannuthal - மன்னிப்பு தமிழ்ச் சொல்லே ! மன்னுதல் = கருதுதல், எண்ணுதல். (Consider, Think) (மன்னல் - தொழிற்பெயர்: Verb மன் - முதனிலைத் தொழிற் பெயர். மான் முதனிலை திரிந்த தொழிற்பெயர். மான் +அம் =மானம்). மன்னல் / மன்னுதல் என்றால் தன்னிலையில் மாறாது நிற்றல் என்பது பொருள்.(Being constant in one's opinion) மன் + இற்றல் = மன்னிற்றல். இற்றல் - இல் ; இல்லாமல்; போக்குதல். மன்னித்தல் = தன்னிலையில் இருந்து மாறுதல்; முடிவை மாற்றிக் கொள்ளுதல் ; தன்னிலையில் இருந்து பிறர் பொருட்டு இறங்கி வருதல். (Descending for others, changing opinions / decisions) (மன்றாட்டம்--மன்றாட்டு/மன்னாட்டு) Petition, request, en treaty, prayer, வேண்டுகை).