Skip to main content

Posts

Showing posts from March, 2017

சமூகமே சேர்ந்து உருவாக்கிய பசுமைத் தோட்டம்

1999ஆம் ஆண்டில் அமைக்கப் பட்ட ‘ஆஷ்ரம்’ போதையர் மறு வாழ்வு இல்லம் போதைப் புழக்கத் தால் பாதிக்கப்பட்டவர்களைச் சமூகத்துடன் ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்து அறக்கட்டளை வாரியத் தின் கீழ் செயல்படும் ‘ஆஷ்ரம்’ இல்லத்தில் உள்ளவர்களுக்காக பசுமைத் தோட்டத்தை அமைக்கப் போவதாக கடந்த ஆண்டு அறி விக்கப்பட்டது. அதற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. தோட்டக்கலை நிபுணர்கள், மாணவர்கள், தனியார் நிறுவனங் கள், தனிநபர்கள், அரசாங்க அமைப்பு எனக் கிட்டத்தட்ட 90 தொண்டூழியர்கள் சேர்ந்து டர்பன் ரோட்டில் இயங்கிவரும் இவ்வில் லத்தில் பசுமைத் தோட்டத்தை உருவாக்கினர். இந்தப் பசுமைத் தோட்டத்தைப் போக்குவரத்து அமைச்சரும் செம் பவாங் குழுத் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினருமான திரு கோ பூன் வான் நேற்று அதிகாரபூர்வமா கத் திறந்து வைத்தார்.  பசுமைத் தோட்டத்தைத் நேற்று திறந்து வைத்த போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் (நடுவில் அமர்ந்திருப்பவர்), கம்பத்துச் சூழலை நினைவுபடுத்தும் பறவை வகைகளைப் பார்வையிடுகிறார். அவருடன் இந்து அறக்கட்டளை வாரியத் தலைவர் திரு ஆர். ஜெயசந்திரன் (நடுவில் நிற்பவர்), ‘ஆஷ்ரம’த்தின் த...