மரணப்படுக்கையில் இருந்த 14 வயது சிறுமி, 100 ஆண்டுக்குப் பிறகும் உயிர்பிழைக்க வாய்ப்பு உள்ளதாக கூறியதையடுத்து அவர் விரும்பியபடி உடலை உறைநிலையில் பதப்படுத்தி வைக்க லண்டன் ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. லண்டன்: மருத்துவ முறைகளில் காலத்திற்கேற்ப நவீன கண்டுபிடிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் சர்வசாதாரணமாகப் போய்விட்ட நிலையில், அடுத்து தலைமாற்று அறுவை சிகிச்சைக்கான முயற்சியும் இறந்த மனிதனை உயிர்பிழைக்க வைக்கும் ஆய்வுகளும் தொடர்கின்றன. இதனால் அடுத்த தலைமுறையின் மருத்துவ வளர்ச்சி பிரமிக்கத்தக்க வகையில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த மருத்துவ வளர்ச்சியின் மீது நம்பிக்கை வைத்த பிரிட்டனைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணத்தை நெருங்கிய நிலையிலும் எதிர்காலத்தில் உயிர்பிழைக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறி தனது உடலை உறைநிலையில் பாதுகாக்க விரும்பினார். ஆனால், ஏற்கனவே விவாகரத்து பெற்றிருந்த அவளது பெற்றோரிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் இந்த விவகாரம் லண்டன் ஐகோர்ட்டுக்கு சென்றது. மரணப் படுக்கையில் இருந்த அந்த சிறுமி தனத...