டெல்லி: ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க லோக்பால் மசோதா, பெரும்பாலான கட்சிகள் முன்வைத்த திருத்தங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. அன்னா ஹசாரே போன்ற சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து லோக்பால் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முன்வந்தது. ஆனால் அந்த மசோதா வலுவானதாக இல்லை என்று குற்றம்சாட்டப்பட்டது. தற்போது வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி ஹசாரே சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இந்த நிலையில் மத்திய அரசும் முந்தைய லோக்பால் மசோதாவில் திருத்தங்களை மேற்கொண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. வரலாற்று சிறப்புமிக்க மசோதா நேற்று ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.