Skip to main content

Posts

Showing posts from November, 2013

6 மாத குடும்பப் பஞ்சாயத்தை அரை மணி நேரத்தில் தீர்த்த நித்தியானந்தா

\\\\ தந்தி டிவியில் சனிக்கிழமை இரவில் சுவாமி நித்தியானந்தா, நித்ய தர்மம் என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். கோர்ட், கேஸ் என்று நித்தியானந்தாவுக்கே ஆயிரம் பிரச்சனைகள் இருக்கின்றன.. ஆனால் அதையெல்லாம் தாண்டி, இப்போது. பிற குடும்பங்களிடையே ஏற்படும் பிரச்சனைகளை கேட்டு ‘தீர்வு' வழங்கி வருகின்றார். கணவன் மனைவி பிரச்சினை, பிள்ளைகளை ஒதுக்கும் பெற்றோர்கள் என பல பிரச்சினைகளை கேட்டு தீர்வு சொல்கிறார்.

உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர் நகரில் மீண்டும் கலவரம்

முசாஃபர்நகர் : உத்தரபிரதேச மாநிலம் முசாஃபர் நகர் அருகே ஷாபூர் நகரில் இர்பான் என்ற வணிகர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்துள்ளது.  அண்மையில் முசாஃபர் நகரில் ஏற்பட்ட கலவரத்தில் 49 பேர் பலியாகினர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக முகாம்களுக்குச் சென்றனர்.  இந்நிலையில் முசாஃபர் நகர் அருகே ஷாபூர் நகரில் இர்பான் என்ற வர்த்தகர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் ஷாபூர் நகரில் வன்முறையில் ஈடுபட்டனர். அங்குள்ள வீடு, கடைகள், வாகனங்களுக்கு அவர்கள் தீ வைத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வன்முறை தொடர்பாக சிலரை கைது செய்தனர். மேலும் வன்முறை நீடிக்காமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். வன்முறையை தடுக்க முசாஃபர்நகர் முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். உடனடி செய்திகளுக்கு எப்போதும் ஒன் இந்தியாவுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள். Topics: muzaffarnagar, tension, வர்த்தகர், சுட்டுக் ...

ராஞ்சி சிறைச்சாலையில் மாதம் 420 சம்பளத்தில் லாலுவுக்கு தோட்ட வேலை

ராஞ்சி: கால்நடை தீவன ஊழல் வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவுக்கு ராஞ்சி சிறையில் மாதம் ரூ. 420 சம்பளத்தில் தோட்ட வேலை வழங்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு லாலு பிரசாத் முதல்வராக இருந்த கால கட்டத்தில் கால்நடைகளுக்கு தீவனம் வாங்கியதாக அரசு கருவூலங்களில் போலி பில்கள் கொடுக்கப்பட்டு ரூ. 900 கோடி மோசடி செய்யப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ மொத்தம் 52 வழக்குகள் பதிவு செய்தது. இதில் லாலு பிரசாத் மீது மட்டும் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் ஒரு வழக்கில் ராஞ்சி சிபிஐ கோர்ட் கடந்த மாதம் தீர்ப்பளித்தது. லாலு பிரசாத் உள்பட 45 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. லாலு பிரசாத்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்கள் சிபிஐ கோர்ட்டிலும் பின்னர்  ராஞ்சி ஐகோர்ட்டிலும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையில் லாலு சிறையில் ராஜ வாழ்க்கை வாழ்வதாக குற்றம் சாட்டப்பட்டது. தினந்தோறும் அவரை நூற்றுக் கணக்கானவர்கள் சந்தித்து வந்தனர். சிறை விதிக...