கிணத்துக்கடவு: கோவை அருகே செட்டிக்காபாளையத்தில் அர்ஜூன் பொறியியல் கல்லூரி திறப்பு விழா நேற்று நடந்தது. கல்லூரி தலைவர் சூர்யநாராயணன் தலைமை தாங்கினார். முதல்வர் விஜயராகவன் முன்னிலை வகித்தார். செயலாளர் சுரேஷ்குமார் வரவேற்றார். சந்திராயன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை துவக்கி வைத்தார். அவர் பேசியதாவது: சந்திராயன் விண்கலம் ஒன்றை செலுத்துவதற்கு முன் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகள் 69 விண்கலங்களை விண்ணில் செலுத்தின. சந்திரனில் தண்ணீர் இருக்கிறதா? என்று ஆராய்ந்து வந்தன. அவர்களால் சந்திரனில் தண்ணீர் இருப்பதை கண்டறிய முடியவில்லை. இந்நிலையில் உலக அளவில் 70வதாக சந்திராயன்&1 விண்கலத்தை சந்திரனில் ஆராய்ச்சி செய்ய இந்தியா அனுப்பியது. அங்கு தண்ணீர் இருப்பதை சந்திராயன் &1 விண்கலம் கண்டறிந்து இந்தியாவுக்கு தகவல்களை அளித்தது. இதனால் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மீது மற்ற நாடுகளின் பார்வை திரும்பியுள்ளது. 43 ஆண்டுகளாக தொடர்ந்து சந்திரனுக்கு விண்கலத்தை ஆய்வுக்காக செலுத்தி வந்த அமெரிக்கா, சந்திராயன் கண்டறிந்ததை மீண்டும் ஒரு விண்கலம் அனுப்பி அது உண...