வாஷிங்டன் : வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு பஞ்சாப் மாநில அரசு 10 சதவீதம் வீடு மற்றும் நிலம் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்துக்கு அமெரிக்க பஞ்சாபி அசோசியேஷன் பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வட அமெரிக்க பஞ்சாபி அசோசியேஷனை சேர்ந்த சாட்நாம் சிங் சாகல் கூறியதாவது: வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு நிலம் வழங்குவது குறித்து, பஞ்சாப் அரசு நல்ல முடிவை எடுத்துள்ளது. பஞ்சாப் துணை முதல்வர் சுக்பிர் சிங் பாதல் நேற்று இந்த திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்தை அரசு முழுமையாக செயல்படுத்த வேண்டும். வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அனைவருக்கும் பாரபட்சமின்றி வீடு, நிலம் வழங்க வேண்டும். நியாயமான அடிப்படையில் நீதியை நிலைநாட்டும் வகையில் நிலம், வீடு வழங்க வேண்டும். வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மற்றும் குடும்பத்தினர் அவர்களது சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாதுகாக்க அரசு தேவையான உதவி செய்யவில்லை என்பது வருத்தமாக உள்ளது. இவர்களுக்கு மாநில அரசு நிலம், வீடு வழங்குவது மட்டும் முக்கியம் அல்ல, அதை பாதுகாக்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்யவேண்டும். இவ்வாறு சாட்நாம் சிங் கூறின...