கால் விரல் மூட்டுகளில் 2 கி.மீ நடந்து 8ம் வகுப்பு மாணவன் உலக சாதனை : ரத்தம் கசிந்தும் மனம் தளரவில்லை கருத்துகளை தெரிவிக்க
கோவை: கோவை சுந்தராபுரத்தை சேர்ந்த கார் டிரைவர் சண்முகசுந்தரம் மகன் ஸ்ரீசைலேஷ்(14). குனியமுத்தூர் நிர்மல்மாதா பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கிறார். கால்விரல்களை மடக்கி மூட்டுகளில் நடக்கப்போவதாக அறிவித்தார். கோவை சுந்தராபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டப வளாகத்தில் நேற்று இந்த நிகழ்ச்சி நடந்தது. ஒரு கிலோ மீட்டர் தூரத்தை கடக்கும் வரை ஓய்வெடுக்கவில்லை. 10 நிமிடம் மட்டுமே ஓய்வு எடுத்த பின்னர் நடக்க ஆரம்பித்தார். அடுத்த 400 மீட்டர் நடக்கும் போது சோர்ந்தாலும் தளரவில்லை. 1600 மீட்டர் தூரத்தை எட்டிய போது கால் விரல்களில் ரத்தம் கசிந்தது. தொடர்ந்து மாணவர் நடப்பாரா என்ற சந்தேகமும் ஏற்பட்டது. மனம் தளராத ஸ்ரீசைலேஷ், 10 நிமிடம் ஓய்வெடுத்துக்கொண்டு கால்களில் பேண்டேஜ் துணிகளை சுற்றி மீதி தூரத்தையும் கடந்தார். ஒரு மணி நேரம் 2 வினாடிகளில் சாதனையை முடித்தார். காலில் தொடர்ந்து ரத்தம் கசியவே சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டார். சாதனை நிகழ்ச்சியை எலைட் உலக சாதனை நிறுவனத்தின் ஆய்வாளர் ஸிரோன்வால் லால், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி(சிங்கப்பூர்) சேர்ந்த ஆய்வாளர் லாரன்ஜோ மைக்கேல் தாமஸ் ஆகிய...